பள்ளி காலை உணவு திட்டத்தில் சிரியர்களை ஈடுபடுத்த கூடாது Syrians should not be included in the school breakfast program
பள்ளி காலை உணவு திட்டத் தில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அக்கூட்டணி மாவட்டச் செயற் குழுக் கூட்டம் சிவகங்கையில் மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சகாயதைனேஸ் பேசினார். பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ரவி, குமரேசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் அமலசேவியர், மரியச்செல்வம், கல்வி மாவட்டச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில், காளையார் கோவிலில்ஜன. 11, 12 ஆகிய தேதி களில் மாநில செயற்குழு. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய் யப்பட்டது. காலை உணவுத் திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.