ஓய்வூதிய பரிந்துரையை களஞ்சியம் செயலியில் அனுப்ப அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 13, 2024

ஓய்வூதிய பரிந்துரையை களஞ்சியம் செயலியில் அனுப்ப அறிவுறுத்தல்

ஓய்வூதிய பரிந்துரையை களஞ்சியம் செயலியில் அனுப்ப அறிவுறுத்தல்

தேனி, டிச.11- கலெக்டர் அலுவலகத் தில் கருவூலத்துறை சார் பில் அரசுத்துறை மாவட்ட அலுலர்களுக்கான கூட் டம் நடந்தது.

கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித் தார். மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலம், வரும் நாட்களில் ஓய்வூ திய முன்மொழிவுகளை மாநில முதன்மை கணக்கா யர் அலுவலகத்திற்குகளஞ் சியம் 2.0 தளத்தின் மூலம் மட்டுமே அனுப்ப வேண் டும்.

அனுப்ப வேண்டிய வற்றை டிச.,20க்குள்களஞ் சியம் செயலியில் அனுப்ப வேண்டும். நீண்ட கால மாக நிலுவையில் உள்ள வருமான வரி தொடர்பான கோப்புகளை சரி செய்து கருவூல அலுவலரிடம் அளிக்க வேண்டும். சத் துணவு பணியாளர்கள்,ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட பணி யாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதிய முன்மொழிவு களை களஞ்சியம் செயலி யில் அனுப்ப வேண்டும். விடுபட்ட அல்லது தவறு தலாக உள்ள மின்கட்டண இணைப்புகளை சரிசெய்து பதிவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் சசிகலா, பிற்படுத் தப்பட்டோர் நல அலு வலர் வெங்கடாசலம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, சமூக நல அலுவலர் சியா மளா தேவி, சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா, கால்நடைபராம ரிப்புத்துறை இணை இயக் குநர் கோயில்ராஜா உள் ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.