Apprenticeship admission camp to be held on the 9th at the Government Vocational Training Center - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 7, 2024

Apprenticeship admission camp to be held on the 9th at the Government Vocational Training Center

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 9ம் தேதி தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் Apprenticeship admission camp to be held on the 9th at the Government Vocational Training Center

திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் நத்தம் சாலை, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 9ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான தொழிற்பிரிவு களில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சி யாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,050முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். எனவே, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.