6-9 வகுப்பு மாணவர்கள் கண்டு விவாதித்தல் சிறார் திரைப்படம் திரையிடுதல் விழிப்புணர்வு குறும்படம் திரையிடல் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 13, 2024

6-9 வகுப்பு மாணவர்கள் கண்டு விவாதித்தல் சிறார் திரைப்படம் திரையிடுதல் விழிப்புணர்வு குறும்படம் திரையிடல் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து DSE செயல்முறைகள்!



நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006.

பொருள்:-

ந.க.எண். 34785/எம்/இ1/2023 நாள்: .11.2024

பள்ளிக்கல்வி பள்ளி மன்ற செயல்பாடுகள் சிறார் திரைப்படம் திரையிடுதல் 202425 - அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு மாணவர்கள் கண்டு விவாதித்தல் சிறார் திரைப்படம் திரையிடுதல் விழிப்புணர்வு குறும்படம் திரையிடல் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.

பார்வை:- 1 தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண். 34785 /எம்/இ1/2022 நாள் 19.05.2023, 06.12.2023

2 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடித ந.க.எண்.34785/எம்/இ1/2023, நாள்.04.01.2024. 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் முக்கியமான நோக்கமாக அமைகிறது.

ஒரு திரைப்படத்தை வெறுமனே நகரும் பிரேம்களாக பார்ப்பதை விட, சர்வதேச சினிமா பற்றி குழந்தைகளுக்கு ஒரு பரந்த கருத்தை வழங்குவது. பள்ளிகளில் மாணவர்களின் கல்வியை வேறுபட்ட முறையில் அணுகுதல், கலை, கலாசாரம் மற்றும் திரைப்படங்களை ஒருங்கிணைத்து பிள்ளைகளின் கற்பனைத்திறன், படைப்பாற்றலை வளர்த்தல். மேலும், இத்திரைபடங்களை மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளை பெற இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது..

திரைப்பட மன்றம் (மூவி கிளப்) நோக்கங்கள்:

கண்ணுறும் • திரைப்படங்களை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்தல், திரைப்பட நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல், பல்வேறு வகைகள் மற்றும் கருப்பொருள்களுக்கு இடையில் வேறுபடுதல், ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல்.

திரைப்பட விமர்சனங்கள், திரைக்கதை எழுதுதல், நடிப்பு அல்லது திரைப்படத் தயாரிப்பு மூலம் எண்ணங்கள், யோசனைகள் மற்றும் முன்னோக்குகளை மாணவர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல். கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் இது சார்ந்த தொழில் ஆர்வத்தை ஊக்குவித்தல்.

சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க செய்தல்.

திரைப்பட விவரம்

ஒவ்வொரு மாதமும், இரண்டாவது வாராத்தில் சிறார் திரைப்படம் திரையிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் முன்கூட்டியே மாதத்தின் முதல் வாராத்தில் EMIS வழியே தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஆண்டின் முதல் சிறார் திரைப்படமானது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில், மாணவர்கள் தயாரித்த “டாப் 10" என்ற தலைப்பில், குழந்தைகள் தினத்தையொட்டி நவம்பர் - 2024 ஆம் மாதத்தில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் மனநலத்தினை செறிவூட்டுவதற்காக 14416 சிறப்பு எண் வசதியினை ஆசிரியர்கள் மற்றம் கழந்தைகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட உள்ளது.

இத்திரைப்படம்: பள்ளிகளில் திரையிடுதல் சார்ந்து பள்ளி தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

வழிகாட்டும் நெறிமுறைகள்:

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட சிறார் திரைப்படங்கள் திரையிடலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளையில் இத்திரைப்படத்தினை திரையிடுதல் வேண்டும்.

> திரைப்படம் திரையிடலுக்கான நிகழ்ச்சி நிரல் இணைப்பு-1ல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் திரைப்படம் திரையிடுதல் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும்.

> பள்ளி சூழலுக்கேற்ப, மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பின் முன்கூட்டியே திட்டமிட்டு மாணவர்களை குழுக்களாக பிரித்து கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறுமின்றி திரையிடல் நிகழ்வினை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மாணவர்களும் திரைப்படத்தை காண்பதற்கு நல்ல காற்றோட்டத்துடன் போதுமான இடவசதி உள்ள அறையை தெரிவு செய்ய வேண்டும்.

> திரையிடுதலுக்கு முன், திரைப்படக்காட்டி மற்றும் ஒலிப்பெருக்கி சாதனங்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். குழந்தைகள் சிறந்த திரைப்பட அனுபவத்தை பெற ஏதுவாக, வெளிப்புற ஒளி குறைவாக இருப்பதையும் போதுமான காற்றுவசதி உள்ளதையும் உறுதி செய்திடல் வேண்டும். மின்சாதனங்கள் அதிக வெப்பமடையாதிருக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் மின் இணைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மின்சாதனங்களை மாணவர்கள் எளிதில் அணுக இயலாத வகையில் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

> குறிப்பு: EMIS வாயிலாக வழங்கப்படும் இத்திரைபடம் மாணவர்களுக்கென பிரத்யேகமாக தொகுக்கப்பட்டுள்ளது. எனவே, EMIS தளத்திலிருந்து மட்டுமே திரைப்படத்தினை திரையிடுதல்/பதிவிறக்கம் செய்தல் வேண்டும். பிற வலைதளங்களிலிருந்து இத்திரைப்படம் திரையிடுதல்/பதிவிறக்கம் செய்தல் கூடாது.

உள்நுழைவு பதிவிறக்கம் செய்து

> EMIS இணையவழியே தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அடையாளங்களை(LoginID) பயன்படுத்தி, திரைப்படத்தினை கொள்ளலாம். முன்கூட்டியே, பதிவிறக்கம் செய்து, Pen drive அல்லது DVDல் சேமித்து வைத்து Hi-tech_lab/TV/Projector/Smart Board வாயிலாக ஒலிபெருக்கி (Speaker) வசதியுடன் மாணவர்களுக்கு திரையிட வேண்டும். இவ்வசதி இல்லாத பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக உரிய வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளலாம். திரைப்படம் திரையிடப்படுவதற்கு முந்தைய வாரத்தில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் EMIS செயலியில் உள்ள திரைப்படத்தின் சுவரொட்டியினை (Poster) (A4 அளவு தாளிற்கு குறைவில்லாமல்) பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அறிந்திடும்வகையில், அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.

> திரையிடப்படவுள்ள திரைப்படத்தின் கதைச்சுருக்கம் முன்கூட்டியே வழங்கப்படும். திரைப்படம் திரையிடும் நாளுக்கு முன்னரே தலைமையாசிரியர்/பொறுப்பாசிரியர் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். திரையிடப்படுவதற்கு முன்னர், மாணவர்களை ஆர்வமூட்டும்வகையில், திரைப்படம் சார்ந்து சிறு முன்உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும்.

> திரைப்படம் திரையிடப்பட்டு முடிந்த பிறகு, படத்தின் மையக்கருத்து/திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து உரையாடல் நிகழ்த்த ஏதுவாக கலையில் ஆர்வமுள்ள துறைசார் வல்லுநரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம்.

திரையிடும்போது தொழிற்நுட்ப காரணங்களால் இடையூறுகள் ஏதேனும் ஏற்படின், திரையிடுதலை தற்காலிகமாக நிறுத்தி, சரிசெய்து திரையிடுதல் மீள தொடங்கப்பட வேண்டும். > திரையிடல் நிகழ்வினை ஆவணப்படுத்தும்போது மாணவர்களின் கவனத்தை சிதறடிக்காத வண்ணம் செயல்பட வேண்டும். திரைப்படம்

சார்ந்து மாணவர்களின் கருத்துகளை இணைப்பு-4 ல் வழங்கப்பட்டுள்ள பின்னூட்டக் (feedback) கேள்வித்தாள் வாயிலாக பெறுதல் வேண்டும். திரைப்படம் மற்றும் அதன் கதைக்களம், மையக் கதாபாத்திரங்கள், துணை நடிகர்களின் கதாபாத்திரங்கள், ஒளிப்பதிவு, கதைநிகழ்வுகள், கதைப்போக்கு, முடிவின்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கவனத்தை அறிந்துணரும் வினாக்களை கேட்கலாம். (மாதிரி இணைப்பு 3 இல் வழங்கப்பட்டுள்ளது)

> ஒவ்வொரு மாதமும், சுமார் 5 மாணவர்களை குழுக்களாகப் பிரித்து திரைப்படம் குறித்து 2-3 நிமிடங்கள் பேச செய்யவேண்டும். திரைப்படம் குறித்து மாணவர்கள் தமது கருத்துக்களை சொந்த நடையில் எழுதச் செய்தல், படம் குறித்த விமர்சனம், பாத்திரம் குறித்த திறனாய்வு, படக்கதையின் சுருக்கம், படத்தில் தான் உணர்ந்தவற்றை விவரித்தல் போன்ற செயல்பாடுகளில் அனைத்து மாணவர்களும் ஈடுபடுதலை ஊளக்குவிக்க வேண்டும்.

மாணவர்களின் படைப்புகளை ஆவணப்படுத்துவதுடன் சிறந்த படைப்புகளை பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் இடம் பெற்றிட உறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கண்காணித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல் > ஒன்றிய அளவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடப்படுதலை உறுதி செய்து உரிய பார்வை விவரங்களை பள்ளிப்பார்வை செயலியில் பதிவு செய்ய வேண்டும். .

மாவட்ட அளவில் மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், பள்ளி துணை ஆய்வாளர்கள், சிறார் திரைப்படம் திரையிடப்படுதலை உறுதி செய்து பார்வையிட்டு, பள்ளிப்பார்வை செயலியில் பதிவு செய்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி ஒவ்வொரு மாதமும், மாநில திட்ட இயக்கத்தால் பரிந்துரைக்கப்படும் திரைப்படத்தினை பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு:

பெறுநர்

1. திரைப்படத் திரையிடல் அமர்விற்கான மாதிரி நிகழ்ச்சி நிரல்

2. நவம்பர் 2024 மாதத்திற்கான திரைப்படத்திற்குரிய சிறார் திரைப்படத்தின் சுருக்கம்

3.மாணவர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை தூண்டும் வினாக்கள்

4.பின்னோட்ட படிவம்.

CLICK HERE TO DOWNLOAD DSE - Children Movie Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.