GPF இறுதி பணம் வழங்குவதற்கு காலதாமதம் - ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.
GPF இறுதி பணம் வழங்குவதற்கு காலதாமதத்திற்குரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான இயக்குநர் அவர்களின் தெளிவுரை
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -06
ந.க.எண்.021438/ சி2/ 2024,நாள். 08:11.2024
பொருள்: தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி இறுதித்தொகை கோரும் விண்ணப்பங்களை மாநில கணக்காயருக்கு அனுப்பக் கோருதல்-சார்பாக.
பார்வை:
அரசுக் கடித எண்.8429/SE1(1)/2024-1, நாள்.09.09.2024 2. மாநில கணக்காயரின் கடிதம் ந.க.எண். FM 1 /IV/2024- 25/18322, நாள்.08.08.2024. பார்வையில் காணும் அரசுக் கடிதம் மற்றும் மாநில கணக்காயரின் கடிதம் இயக்குநரின் பார்வைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
அக்கடிதத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை கோரும் விண்ணப்பங்கள் சார்ந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரால் மிகவும் காலதாமதமாக மாநில கணக்காயருக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட குறையினை களைந்திட 02.11.2024 முதல் 04.12.2024 வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்குபொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை கோரும் விண்ணப்பங்களினை முழுமையான வடிவில் பெற்று அதனை காலம் தாழ்த்தாமல் உரிய தேதியில் சென்னை-18, மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுத்தலாமா என்பது குறித்து இயக்குநரின் ஆணை பணிவுடன் வேண்டப்படுகிறது. மேலும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி இறுதித் தொகை பெற்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் சார்ந்த பணியாளர்களால் காலதாமதமான காலத்திற்கு நிலுவைத் தொகைக்கு வட்டி கேட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவ்வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. எனவே இந்நிகழ்வு சார்பான வழக்குகளை தவிர்க்கும் பொருட்டு இனிவரும் காலங்களில் பொது வருங்கால வைப்பு நிதி இறுதி தொகை பெற்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு அதனடிப்படையில் பெறப்படும் புகார் மனுவின் மீது விசாரணை மேற்கொண்டு சார்ந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் மற்றும் பிரிவு பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து மாவட்டக் கல்வி தெரிவிக்கப்படுகிறது.
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD GPF FINAL WITHDRAWAL APPLICATION PROCEEDINGS PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.