ஆசிரியர்கள் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 13, 2024

ஆசிரியர்கள் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள்!



ஆசிரியர்கள் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள்!

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் (மொத்தம் 1848 பேர்), பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள்!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண்: 072841/சி3/இ2/2024, நாள்: 07.11.2024

பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் கொண்டு இடைநிலை ஆசிரியர்களைக் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் உள்ள போதக காப்பாளர் / காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களை நிரப்புதல் - விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பாக.

பார்வை: ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அவர்களின் கடிதம்,ந.க.எண்.பி3/4868/2012,நாள்.23.09.2024.

****** பார்வையில் காணும் கடிதத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழுள்ள 1351 விடுதிகளில் தற்போது 497 காப்பாளர் / காப்பாளினி பணியிடங்கள் காலியாகவுள்ளதால், அவ்விடுதிகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதில் சுணக்கம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு மாவட்டங்களில் இத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாகவுள்ள பட்டதாரி காப்பாளர் / காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களில் பணிபுரிய பள்ளிக் கல்வித் துறையின்கீழ் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / ஆசிரியைகள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிரப்புவதற்கு ஆவண செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தங்கள் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாகவுள்ள காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் பணி விவரம்

கல்வித் தகுதி

இடைநிலை காப்பாளர் / காப்பாளினி

1 இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு (D.T.Ed.)

போதக காப்பாளர் / காப்பாளினி

2 இளங்கலைக் கல்வியியல் (B.Ed. with any degree) எனவே, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாகவுள்ள 497 காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களுக்குச் செல்ல விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தடையின்மைச் சான்று பெற கருத்துருக்களைப் பெற்று உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லையெனில், அறிக்கையினை பணிந்தனுப்புமாறும் தெரிவிக்கலாகிறது.

இன்மை இணைப்பு விருப்பப் படிவம் CLICK HERE TO DOWNLOAD DSE - Warden in Hostels PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.