CEO கூட்டம் ஒத்திவைப்பு! CEO meeting postponed! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 28, 2024

CEO கூட்டம் ஒத்திவைப்பு! CEO meeting postponed!



சிஇஓ கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை , நவ . 28- தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத் தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது .

இதில் துறை சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விவா திக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன .

அதன்படி நடப்பு மாதத்துக்கான அலு வல் ஆய்வுக் கூட்டம் வேலுார் விஐடி பல்கலைக் கழகத்தில் இன்றும் ( 28 ம் தேதி ) , நாளையும் ( 29 ம் தேதி ) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , செயலர் . மதுமதி , இயக்குனர் கண்ணப்பன் , தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் , முதன்மைக் கல்வி அதிகாரிகள் பங்கேற்க இருந்தனர் .

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது . இதனால் மழைக்கால தடுப்புப் பணிகளில் அமைச் சர்கள் , அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . எனவே , வேலுாரில் இன்று தொடங்க இருந்த கூட் டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

மாற்றுத்தேதி பின்பு அறிவிக்கப்படும் என்று சிஇஓகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.