வாக்காளர் முகாமில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு - ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 22, 2024

வாக்காளர் முகாமில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு - ஆசிரியர் கூட்டணி கோரிக்கை



வாக்காளர் முகாமில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு - ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அரசு விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு உட்பட) வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலராக பணிபுரிவோர்க்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்கி உதவிட வேண்டுதல் - சார்பு..

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமானது 16.11.2024, 17:11,2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய 4 நாட்கள் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலராக (DLO) பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்குமாறு மாநில அமைப்பு வேண்டுகிறது.

அரசின் விடுப்பு விதிகளின் படி மேற்கண்ட 4 நாட்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கிட ஆவன செய்து உதவிட வேண்டுமாய் தங்களிடம் மாநில அமைப்பின் சார்பில் பெரிதும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.