வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
👇👇👇👇
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 நக.எண்.24935/ஜெ2/2024, நாள்.09.11.2024,
பொருள்:
தொடக்கக் கல்வி - அரசு / அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் 2025 ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்” விருது பெறத் தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் சார்பாக
பார்வை: அரசுக் கடிதம் எண்.1910/பொது-11/2024-1, நாள்.29.10.2024. பார்வையிற் காணும் அரசுக் கடிதத்திற்கிணங்க வீர, தீரச் செயல்களுக்கான "அண்ணா பதக்கம்" ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது எனவும் வீரதீரச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர் எனவும், பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும் எனவும், பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை எனவும் இவ்விருது ரூ.1,00,000/--க்கான (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும் எனவும், இப்பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26,012025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும். பார்வையில் கண்டுள்ள அரசுக் கடிதத்தில், 2025ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் - விருதுக்கு விதிகளின்படி தகுதியுடைய அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடித்தில், விருதுக்கான விண்ணப்பங்கள் https./awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும் எனவும், அவ்விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) படிவத்தில் தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்.15.12.2024 ஆகும் எனவும், இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனவும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனவும் பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ள வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுவதற்கு. தொடக்கக் கல்வித் துறையின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் வீர தீரச் செயல்கள் புரிந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின் அவர்களுடைய பெயர்களை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் 15,12.2024 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள படிவத்தில் அனுப்பி வைக்குமாறும், பரிந்துரை இல்லை எனில் இன்மை” அறிக்கை இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்டத் (தொடக்கக்கல்வி) அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.
School Education Department- Anna Medal for Gallantry 2025 - Acts of Bravery of Civilians and Government Servants - Recommendations Called for - Regarding.
Ref:
From the Secretary to Government, Public (General-1) Department letter No.e-8037/ Genl.1/ 2024-1, Dated 21.10.2024.
I am directed to enclose a copy of the reference cited, wherein, it has been requested to recommend the names of Government Servants belonging to Heads of Department under the control of School Education Department, who have done a conspicuous act of gallantry in saving life, property etc., for the award of 'Anna Medal for Gallantry' which is to be presented by the Hon'ble Chief Minister during the Republic Day Celebrations 2025.
2) I am therefore to request you to forward the applications/ recommendation for the above award on online portal (i.e.https.//awards.tn.gov.in) along with a detailed report justifying the reccomendations of each case in English and Tamil in the prescribed format on or before 15.12.2024 (Format available in the web portal http://awards.tn.gov.in). If there is no recommendation, a 'Nil' report may be sent to the Government.
Sub: Anna Medal for Gallantry, 2025 - Acts of Bravery of Civilians and Government Servants - Recommendations - Called for - Regarding. Ref: 1. G.O.Ms.No.383, Public (Misc.) Department, dated: 12.02.1980. G.O.Ms.No.734, Public (Misc.) Department, dated: 01.04.1986.
I am directed to invite attention to the Government Orders cited, wherein in the Government Order first cited, the Government of Tamil Nadu had instituted the award of 'Anna Medal for Gallantry' for Civilians / Government Servants for their conspicuous acts of gallantry in saving life, property etc. The above awards are presented by the Hon'ble Chief Minister of Tamil Nadu every year during the Republic Day celebrations.
2. In the Government order second cited, the Government had ordered that the number of Anna Medals for Gallantry awarded in a year shall be on an average of six medals, with three (3) medals for general public and three (3) for Government servants (including Uniformed Services). The award carries a medal worth (Rs.9,000/-), a cheque for Rs.1,00,000/- and a certificate.
3. I am therefore to request you to forward the applications / recommendations for the Anna Medal for Gallantry on the online portal https://awards.tn.gov.in"designed for this purpose. The Applications / recommendations should contain all relevant details specified in the format available on the portal, including a citation in narrative form (both in English and Tamil) (maximum 800 words), clearly bringing out the conspicuous act of gallantry of the -person recommended. While recommending a person online, it should be ensured that all the necessary details are properly filled.
4. The last date for sending applications / recommendations for the Anna Medal for Gallantry is 15th December, 2024. The applications which are not received within the prescribed time will be rejected. If there are no recommendations, a 'Nil' report may be sent within the stipulated time. 5. I am also to request you to communicate to all the Head of Departments under your control and ensure that the applications / recommendations for the above award are made online as specified in the format available in the web portal https://awards.tn.gov.in are sent to Government latest by 15th December, 2024. அண்ணா பதக்கம் வீர, தீரச் செயல்களுக்கான "அண்ணா பதக்கம்" ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)- க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.01.2025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
2. 2025-ஆம் ஆண்டிற்கான 'வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்' விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள்!
இணையதளத்தில் பரிந்துரைகள் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும். விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
3. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.12.2024 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர். Public (General-I) Department, Secretariat, Chennai-600009.
The Government of Tamil Nadu has instituted the 'Anna Medal for Gallantry' for Civilians/Government Servants for their conspicuous acts of gallantry in saving life, property etc., which will be presented to the awardee by the Hon'ble Chief Minister during the Republic Day Celebrations on 26th January, 2025. The applicants belonging to Tamil Nadu alone are eligible for getting this award. Anna Medals for Gallantry awarded in a year shall be on an average of six medals, with three (3) medals for general public and three (3) for Government servants (Including Uniformed Services). There is no age limit for receipt of the medal. This award consists of a cheque for Rs.1,00,000/- (Rupees one lakh only), a medal and a citation.
2. Nominations are called for 'Anna Medal for Gallantry' award for the year 2025. The applications/recommendations for the Anna Gallantry Awards will be received only on the online portal https://awards.tn.gov.in designed for this purpose. The applications / recommendations should contain all relevant details specified in the format available on the portal, including a citation in narrative form (maximum 800 words), clearly bringing out the conspicuous act of gallantry of the person and it should be ensured that all the necessary details are properly filled.
3. The last date for sending applications / recommendations for the Annal Gallantry Awards is 15.12.2024. The applications /recommendations received through online mode only will be considered. The applications which are not received within the prescribed time will be rejected. The awardees will be selected by the selection committee constituted by the Government. CLICK HERE TO DOWNLOAD Anna Award - DEE Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.