முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 16, 2024

முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்



முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களை தகாத வார்த்தையால் பேசும் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட தலைவர் ஆசிரியர் ஆறுமுகம் கூறியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது, ஆசிரியர்களை ஒருமையில் பேசுவது, ஆசிரியர்களின் பிறப்பை தவறாக பேசுவது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான அரசு வழங்கப்பட்டுள்ள தற்செயல் விடுப்புகளை கணக்கிட்டு அதிக தற்செயல் விடுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களை தனியாக அழைத்து ஒருமையில் திட்டி வருகிறார். பல்வேறு ஆசிரியர்களின் வேதனை தெரிவித்ததன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நள்ளிரவில் காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.