பகுதிநேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி
கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே அரசு சம்பளம் வழங்கியுள்ளதால், பொருளாதார பிரச்னையின்றி பகுதிநேர ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளமானது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி(எஸ்.எஸ்.ஏ.,) மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் அனுப்பி வைக்கப்பட்டு, 5ம் தேதிக்குள் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை சிரமமின்றி கொண்டாடும் விதமாக, ரூ.12 ஆயிரத்து, 500 சம்பளத்தை மொத்தமாகவும், விரைவாகவும் வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காக, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான, 181ஐ விரைந்து செயல்படுத்தி, 13 ஆண்டு பணியை முறைப்படுத்தி, பணிநிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.