900 PG Teachers - Pay Authorization Order Upto 30.04.2025 - Govt Letter - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 12, 2024

900 PG Teachers - Pay Authorization Order Upto 30.04.2025 - Govt Letter



900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.04.2025 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

900 முதுகலை ஆசிரியர் (2017-2018 Upgraded HSS) பணியிடங்களுக்கு 30.04.2025 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

பள்ளிக்கல்வி 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது - அப்பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது இப்பணியிடங்களுக்கு 01.08.2021 முதல் 31.07.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து 01.08.2024 முதல் 31.10.2024 வரை பள்ளிக் கல்வி இயக்குநரால் விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது தற்போது 01.11.2024 முதல் 30.04.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் - தொடர்பாக. 1. அரசாணை (நிலை) எண்.173, பள்ளிக்கல்வித் [பக2(2)] துறை, நாள். 18.07.2017.

2. அரசாணை (1டி) எண். 41, பள்ளிக்கல்வித்[பக5(1)]துறை, நாள். 28.02.2022.

3. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறை ந.க. எண். 31575 /எல்/இ3/2021, நாள். 01.08.2024.

4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.31511/எல் / இ3/2021, நாள். 08.10.2024,

பார்வை 1-இல் காணும் அரசாணைகளில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் 100 அரசு/ நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்திட அனுமதி வழங்கியும், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளி ஒவ்வொன்றிலும் உள்ள உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்தை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடமாக நிலை (upgraded) உயர்த்திட ஒப்பளிப்பு வழங்கியும், நிலை உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒவ்வொன்றிற்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அவை நிரப்பப்படும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக ஒப்பளிப்பு செய்தும் ஆணை வெளியிடப்பட்டது. பார்வை 2-இல காணும் அரசாணையில், பார்வை 1-இல் காணும் அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2021 முதல் 31.07.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.08.2024 முதல் 31.10.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில், 01.11.2024 முதல் 30.04.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பார்வை 4-இல் காணும் கடிதத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதத்தில் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, மேற்குறிப்பிட்டுள்ள 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.11.2024 முதல் 30.04.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.11.2024 முதல் 30.04.2025 வரை ஆறு மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334 நிதித்(சம்பளம்)துறை, நாள். 22.10.2022-இல் துறைச் செயலாளருக்கு பகிர்வின்படி வெளியிடப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD 900 PG Posts 01.11.2024 to 30.04.2025 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.