குரூப் 4 - சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 18, 2024

குரூப் 4 - சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு!

குரூப் 4 - சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு!

குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 9-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.

சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். தொடர்ந்து குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு 8,932 காலிப்பணியிடங்களாக அதிகரித்தது.


பின்னர் மீண்டும் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டு, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,491ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த அக்.28ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதனை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.