2025-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 22, 2024

2025-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு - அரசாணை வெளியீடு

br>
2025-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் அறிவித்து – ஆணை - மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறையாக உள்ளன.

2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல்

அரசாணை (நிலை) எண்.792 Dt: November 22, 2024 விடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது. 2025 பொது விடுமுறை நாட்கள் English
CLICK HERE TO DOWNLOAD PDF

2025 பொது விடுமுறை நாட்கள் Tamil
CLICK HERE TO DOWNLOAD PDF 2025ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகை நாட்களை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால், பொதுவான விடுமுறை என்பது 23 நாள்கள் ஆகும்.

இந்த பொது விடுமுறை மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் பொருந்தும். அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினம், பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம், மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10-ம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி, மே 1ம் தேதி மே தினம் ஆகியவற்றை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகை, ஜூலை 6-ம் தேதி மொகரம் பண்டிகை, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 5ம் தேதி மிலாது நபி, அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை என மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.