TN-SIDP வெற்றி பெற்ற தமிழக பள்ளிகளின் விபரம் மற்றும் பரிசளிப்பு (அரசு) நிகழ்ச்சி பற்றிய தகவல்கள்
பொருள்: EDII பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் (SIDP 2.0) 2023-24 வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாதிரி தயாரிப்புகளை காட்சிப்படுத்தல் நிகழ்வு தகவல் தெரிவித்தல் தொடர்பாக. தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2023-24 ஆண்டுக்கான வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாதிரி தயாரிப்புகளை காட்சிப்படுத்தல் நிகழ்வானது 11.11.2024 (திங்கட்கிழமை), சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, இணைப்பில் உள்ள முதல் பரிசு பெற்ற(10 அணியினர்) மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற(10 அணியினர்) மொத்தம் 20 அணியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசும், 20 அணிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் இந்நிகழ்வில் வழங்கப்பட உள்ளது. எனவே, வெற்றி பெற்ற 20 அணிகளில் உள்ள அனைத்து அணி மாணவ மாணவியர்களும், 20 வழிகாட்டி ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் வழியாக உத்தரவிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வெற்றி பெற்ற 20 அணிகளும் தங்கள் மாதிரி தயாரிப்புகளை (Prototype) காட்சிப்படுத்தும் (Demo) வகையில் அனைத்து பொருள்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனைவரும் காலை 8.00 மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துசேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN-SIDP வெற்றி பெற்ற தமிழக பள்ளிகளின் விபரம் மற்றும் பரிசளிப்பு (அரசு) நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் - Download Here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.