பள்ளி மாணவர்கள் விண்வெளி வார விழா கட்டுரைகளை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் -இஸ்ரோ தகவல்
பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் விண்வெளி வார விழா கட்டுரைகளை வருகிற 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம் மகேந்திரகிரி இஸ்ரோ வளாகம் தகவல் மதுரை, செப்.21- நெல்லைள நெல்லை மாவட்டம் வருகிற மகேந்திரகிரியில் கேந்திரகிரியில் இஸ்ரோ எரிபொருள் வள| வளா விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.
இதற்காக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின் இதில் தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொள் ளலாம். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு "விண்வெளி ஆய்வுநம் உலகை எப்படி மாற்றியுள்ளது"க என்ற தலைப்பிலும், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு "காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் விண்வெளி நிறுவனங்களின் பங்கு" என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டிகள் நட டக்கின்றன. இந்த கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங் கில மொழியில் மாணவ, மாணவிகளின் கையால் எழுதியிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பெயர். வயது, படிக்கும் வகுப்பு, பள்ளி, பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
கட்டுரையை எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த பள் னியின் தலைமை ஆசிரியர், முதல்வர் ஒப்புகை சான்றிதழ் வழங் கியிருக்க வேண்டும். கட்டுரைகளை 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், த மாணல், மாணவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டுரை களை வருகிற 30-ந் தேதி வரை சமர்ப்பிக்க காலக்கெடு வழங் கப்பட்டுள்ளது. கட்டுரைகளை 'நிர்வாக அலுவலர், ஐ.பி.ஆர்.சி., மகேந்திரகிரி, நெல்லைமாவட்டம்-627133 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் பரிசு, 2-ம் பரிசு மற்றும் 3-ம் பரிசு வழங்கப்படும், மேலும் விவ ம் ரங்களுக்கு9486041737, 9994239306 ஆகிய எண்களில் தொடர்பு தே கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, September 22, 2024
New
பள்ளி மாணவர்கள் விண்வெளி வார விழா கட்டுரைகளை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் -இஸ்ரோ தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.