டிக்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பு - ( 23.09.2024) கலந்தாலோசிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் அழைப்பு!
டிக்டோஜாக் - கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் 23.09.2024 அன்று சென்னையில் கலந்தாலோசிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் அழைப்பு!
தமிழ்நாடு தொடக்கக் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிக்டோஜாக் 31 அம்சக் சக கோரி கோரிக்கை - 30.092024 மற்றும் 01102024 சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமை 23.09.2024 காலை 09.15 மணி கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க அழைத்தல் சார்ந்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிக்டோஜாக், 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 30092024 மற்றும் 0110:2024 ஆகிய தேதிகளில் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, மாண்புமிரு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 23.08.2024 (திங்கள்கிழமை! காலை 09:15 மணி அளவில் தலைமை செயலகம், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க தங்களை அழைக்க பணிக்கப்பட்டுள்ளேன். இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள சங்கங்களின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.