1- 8th Std First Term Exam Sep 2024 - Schedule & Question Paper Download Instructions - DEE Proceedings
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்! தொடக்கக்கல்வி - முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்- வழிகாட்டுதல்கள் - சார்ந்து.
மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்கள் துறைத்தலைவர்களுக்கான கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி (FA) மற்றும் தொகுத்தறி (SA) மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 20.09.2024 முதல் 27.09.2024 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணை இத்துடன் இணைப்பு-1& 2 இணைக்கப்பட்டுள்ளது. இத்தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் வினாத்தாள்கள் உரிய நேரத்தில் வழங்கிடவும் நடுநிலைப் பள்ளியில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும், பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) முதல் பருவத்திற்கான தொகுத்திறி மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு, பயிற்றுமொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத்தாள்களை நகலெடுத்து வட்டார கல்வி அலுவலர் வாயிலாக வழங்கிட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) வினாத்தாள்களை TN EMIS உள்நுழைவில் 06.09.2024 முதல் 10.09.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் இணைப்பு-3 இல் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பநகலெடுத்தல் வேண்டும். நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை, வட்டார கல்வி அலுவலர் உதவியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும், வகுப்பு வாரியாக, பாட வாரியாக, மற்றும் பயிற்று வழி வாரியாகப் பிரித்து தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்தல் வேண்டும். அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும்.
வகுப்பு:
பாடத்தின் பெயர்:
பயிலும் வழி :
ஒரு பள்ளிக்குத் தேவைப்படும் உறைகளின் எண்ணிக்கை 19 ஆகும். (1ஆம் வகுப்புக்கு 3, 2ஆம் வகுப்புக்கு 3, 3ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் வகுப்புக்கு 5, 5ஆம் வகுப்புக்கு 5, மொத்தம் 19). அனைத்துப் பள்ளிகளுக்கும் முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள்களைப் பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணையின்படி அன்று நடைபெறவிருக்கும் பாடத்திற்குரிய வினாத்தாளை மட்டும் எடுத்து மதிப்பீடு நடத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.
வினாத்தாள்கள் நகலெடுத்தல், உறையிலிட்டு பள்ளிகளுக்கு வழங்குதல் ஆகிய செயல்பாடுகளுக்கு கடந்த ஆண்டு போல இவ்வாண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிவாரியாக நிதி கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக விடுவிக்கப்படும் நிதி இத்துடன் இணைப்பாக-4 இல் இணைக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும். இத்தொகை பின்னர் அரசு நடுநிலைப்பள்ளியில், 6 முதல் 8 வகுப்பு வரை முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்களை எவ்வித இடர்ப்பாடும் இன்றி, உரிய நேரத்தில் பதிவிறக்கம் செய்து நகலெடுத்து சார்ந்த பள்ளிகளுக்கு கீழ்குறிப்பிட்ட அறிவுரைகளின்படி வழங்க தேவையான மேற்கொள்ளுமாறு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும்(தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2024.2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1 வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். 2. தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.
3. வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
4. தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து அரசுப் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
5. அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு A 5 இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இணைப்பு:
1. வகுப்பு 1-5- முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை -2024-25.
2 வகுப்பு6-8.முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை-2024-25. -
3. வகுப்பு1-5. EMIS போர்டலில் இருந்து வினாத்தாள்கள் பதிவிறக்கம் வழிமுறைகள்.
4. வகுப்பு1.5- மாவட்ட வாரியாக தேவைப்படும் நிதி விவரம்.
5. வகுப்பு 6-8. வழிகாட்டு நெறிமுறைகள் - வினாத்தாள் பதிவிறக்கம் CLICK HERE TO DOWNLOAD DEE - First Term Examination Schedule & Instructions PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.