kalviseithiofficial.com வாசக நண்பர்கள் அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 78 - ஆவது சுதந்திர தின வாழ்த்துகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 14, 2024

kalviseithiofficial.com வாசக நண்பர்கள் அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 78 - ஆவது சுதந்திர தின வாழ்த்துகள்



kalviseithiofficial.com வாசக நண்பர்கள் அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 78 - ஆவது சுதந்திர தின வாழ்த்துகள்

எங்கள் நாடு பெருமை கொள் பெருநிலம்

நிறைய மாநிலம்

பல்வகை மொழியினம்

மனதால் ஓரினம்

இமயந்தொட்டுக் குமரிவரை

உண்டெங்கள் உயிரோட்டம்

இந்தியனுக்கோர் இன்னலென்றால் பொங்கியெழும் பெருங்கூட்டம் மதமா இனமா மொழியா

இவற்றால் இல்லை வேறுபாடு

விஷமத்தனமாய் ஊறுசெய்ய எவனெழுந்தாலும் கூறுபோடு

பல்வித வண்ணக்களஞ்சியமே எங்கள் தேசம்

பிரிவினை விதைத்து எவனாலும் செய்யவே இயலாது பெருநாசம்

வேஷதாரிகளுக்கு ஒருபோதும் இங்கில்லை வாசம்

எங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தியா இந்தியா இந்தியா

அதுதான் உயிர் சுவாசம்

அன்பினில் தழைத்து

அனுதினம் உழைத்து

தேசமுயர்த்துவோம்

அடிமை வாழ்வை அடித்து நொறுக்கிய புனித நன்னாள் அதைப் பெருமையாய்ப் போற்றுவோம் முன்னோர் சிந்திய ரத்தங்களின்றி இந்திய விடுதலை இல்லை

தொல்லைகள் களைந்த அவர்தம் தியாகங்களுக்கு என்றுமே இல்லை எல்லை

பசியும் பஞ்சமும் கடந்து

பல்லுயரம் காணவே உழைப்போம்

அகிலத்தில் தேசத்தை உயர்த்தி

நாம் அனைவரும் நன்றாய் செழிப்போம்

கோடிக்கரங்களும் இணைந்து

கொடுவறுமையை அடியோடு ஒழிப்போம்

மூடப்பேய்களை எல்லாம் ஓட ஓட அழிப்போம் புனித மண்ணிதில் புதுமைக் கல்வியை விதைப்போம்

பேதமில்லா நிலைபெருக

ஒன்றாய் பெருந்தேர் இழுப்போம்

எங்கள் நாடிது

எங்கள் நாடிது

சொல்லச்சொல்ல நெஞ்சினில் இன்பம் கூடுது

ஒருமை உணர்வு நிரம்பியே எங்கள் குருதி ஓடுது

அமைதியும் வளமும் நிரம்பச் சேர்ப்போம்

அதற்காய் இணைந்து கைகள் கோர்ப்போம்

யாவரும் பொதுவென சபதம் ஏற்போம் இன்னொரு காந்திக்கு வேலை தராது

இன்னொரு முறை

நாம் அடிமை படாது

ஒற்றுமை சுமந்து தேசம் வளர்ப்போம்

இந்தியராய் புவிதனில் பெருமை சுமப்போம்.

இனிய விடுதலை நாள் வாழ்த்துகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.