அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை! - தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 20, 2024

அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை! - தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!



தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

• தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் NCC உள்ளிட்ட முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை

• தனியார் சுயநிதிப் பள்ளிகளில் N.S.S., N.C.C. SCOUT & GUIDE மற்றும் JRC போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன

• அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்

• அமைப்புகளின் செயல்பாடுகளை செயல்படுத்த மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும்

• முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது.

• மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம்

POLIMER NEWS 120 AUG 2024



அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை!

தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!

பெற்றோர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சிவராமன் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை முதல்வர் சதீஷ்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முகாமில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக ஆசிரியர், ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.