TPD - Training For PG Teachers - ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 4, 2024

TPD - Training For PG Teachers - ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings



முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு , தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் , உறுப்பினர் செயலரின் கடிதத்தின்படி , பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது 2024 -2025 ஆம் கல்வியாண்டில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே , இக்கல்வியாண்டில் நான்கு கட்டங்களாக தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு ஜுலை -2024 முதல் டிசம்பர் -2024 முடிய கீழ்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. பள்ளிகளுடன் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து 2024 2025 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை-2024 முதல் டிசம்பர்- 2024 முடிய நடத்துதல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.

பார்வை (1) இல் காண் அரசாணையின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி

மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2024 2025 ஆம் கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு, பார்வை (2) இல் காண் சென்னை-06, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள், உறுப்பினர் செயலரின் கடிதத்தின்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது 2024 -2025 ஆம் *கல்வியாண்டில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இக்கல்வியாண்டில் நான்கு கட்டங்களாக தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு ஜுலை-2024 முதல் டிசம்பர்-2024 முடிய கீழ்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இணைப்பில் உள்ள முதுகலை

(தாவரவியல்-58 நபர்கள் + விலங்கியல்-51 நபர்கள்) மேற்படி பணிமனைகளில் பங்குபெற ஏதுவாக உரிய நாட்களில் பணிவிடுவிப்பு செய்யுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பங்கேற்பாளர்களுக்கு தங்கும் இடவசதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரான இந்நிறுவன உதவிப் பேராசிரியர் திருமதி அ. சகாயசினி (99405 64140) என்பாரைத் தொடர்பு கொள்ளுமாறும், மேற்படி பணிமனையில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் பாடத்திற்கான பாடப்புத்தகங்களை உடன் எடுத்துவருமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு : பங்கேற்பாளர்கள் விவரம் (தாவரவியல் & விலங்கியல்) CLICK HERE TO DOWNLOAD TPD Training Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.