போக்சோ குற்றச்சாட்டு: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 10 பேர் பணியிட மாற்றம்
அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்த நிலையில், பல மாதங்களுக் குப் பிறகு அப்பள்ளியின் 10 ஆசி ரியர்கள் இடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.
கோவை மாவட்டம், ஆலாந்து றையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப் ரல் மாதம் நடைபெற்றதாகக் கூறப்ப டும் நிலையில் கடந்த ஆண்டு டிசம் பர் மாதம் தெரியவந்தது. இதைய டுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு டிசம்பர் 5- ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட் டார்.
இதைத் தொடர்ந்து, மாணவியி டம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதும், குற்றஞ்சாட்டப் பட்ட ஆசிரியர் உள்ளிட்ட 10 ஆசிரி யர்கள் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டிய தும் தெரியவந்தது.
அதேநேரம், பள்ளியில் நடை பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம் பவம் குறித்து விசாரணை நடத்தும் படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த பள்ளியின் ஓவிய ஆசிரி யர் எஸ்.ஏ.ராஜ்குமார் என்பவரை பள்ளிக் கல்வித் துறை பணியிடை நீக்கம் செய்தது. அதேபோல, பள் ளியின் தலைமை ஆசிரியரும் பணி யிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசி ரியராக இருந்தவர் உள்பட 6 ஆசிரி யர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவு களின்கீழ் காவல் துறை குற்றப் பத்தி ரிகை தாக்கல் செய்தது.
Wednesday, June 12, 2024
New
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 10 பேர் பணியிட மாற்றம்!
POCSO case registration
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.