ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணிசார் கோரிக்கைகளை EMIS வாயிலாக விண்ணப்பிக்க EMIS இணையதளத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 4, 2024

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணிசார் கோரிக்கைகளை EMIS வாயிலாக விண்ணப்பிக்க EMIS இணையதளத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்

Letter from the Secretary of School Education to the State Program Director to provide special facility on the EMIS website to apply for teaching and non-teaching staff requests through EMIS. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணிசார் கோரிக்கைகளை EMIS வாயிலாக விண்ணப்பிக்க EMIS இணையதளத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்!

பள்ளிக் கல்வித்துறை ஆசிரியரல்லாத கோரிக்கைகள் பணியாளர்கள் ஆசிரியர் மற்றும் பணிசார் கல்வி மேலாண்மை தகவல் முறைமை வாயிலாக விண்ணப்பிக்க வழி வகை செய்திட கோருதல் தொடர்பாக. பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகம் சிறப்பாக நடைபெறவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உடனுக்குடன் சென்றடையவும், தரமான கல்வியை அனைத்து மாணவர்களும் பெற்றிடவும், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தெடக்கக் கல்வி), (இடைநிலைக் கல்வி) (தனியார் பள்ளிகள்) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் என மூன்று நிலையில் உள்ள அலுவலர்களைக் கொண்ட நிர்வாக கட்டமைப்புடன் இத்துறை செயல்பட்டு வருகிறது. 2. கள அளவிலான இத்துறையின் செயல்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விடுப்பு ஒப்பளிப்பு. ஊதிய உயர்வு. ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பணியிட மாறுதல், பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம், தேர்வுநிலை. / சிறப்பு நிலைக்கான ஊதிய நிர்ணயம் மற்றும் பணியில் இளையோருக்கு இணையாக மூத்தவரது ஊதியத்தை சமன் செய்து ஊதிய நிர்ணயம். ஓய்வூதிய பலன்கள் போன்ற பல்வேறு பணிசார் கோரிக்கைகளை உரிய அலுவலருக்கு கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் நுழைவு குறியீட்டை (login id) உபயோகித்து இணைய வழியில் விண்ணப்பித்து தங்களது கோரிக்கைகளை கால தாமதமின்றி தீர்வு பெற்றிட ஏதுவாகவும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகத்திற்காகவும் EMIS தளத்தில் உரிய வழிவகை செய்திடுமாறு (provision to be made in EMIS Portal for application of service requests) தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.