ஸ்லெட் தேர்வு மைய விவரம் வெளியீடு - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 30, 2024

ஸ்லெட் தேர்வு மைய விவரம் வெளியீடு - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்புஸ்லெட் தேர்வு மைய விவரம் எப்போது வெளியீடு? - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு

ஸ்லெட் தேர்வு நாளுக்கு, ஒரு வாரத்துக்கு முன்பாக தேர்வு மைய விவரம் வெளியிடப்படும் என்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித்தேர்வை தமிழக அரசு சார்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. ஜுன் மாதம் நடைபெற உள்ள ஸ்லெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன.

இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையம் எப்போது தெரிவிக்கப்படும் என்பது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளரும், ஸ்லெட் தேர்வுக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜெ.சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வு ஜுன் 7 மற்றும் 8-ம் தேதி கணினிவழியில் பல்வேறு மையங்களில் நடத்தப்பட உள்ளது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், ஷிப்ட்-2 தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். தேர்வு நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தேர்வு மைய விவரம் www.msuniv.ac.in மற்றும் www.msutnset.com ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்.

எனவே, ஸ்லெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மேற்கண்ட இணையதளங்களை அவ்வப்போது பார்த்து விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு 91462-2333741 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.