பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 29, 2024

பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!



பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு! Secretary of School Education Department orders to start Aadhaar special program in schools on the first day of school!

பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!

பள்ளிக் கல்வி "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" அனைத்து பள்ளிகளிலும் ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணியினை மேற்கொள்ளுதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது தொடர் நடவடிக்கை - சார்பு.

அரசாணை (நிலை) எண்.72, பள்ளிக் கல்வி (அகஇ2)த் துறை,

நாள் 11.03.2024.

மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை, உறைக் காலணி, காலுறைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கு முழுமையாக அளிக்கப்படும் நலத்திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது.

2 பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும். குறிப்பாக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவி மற்றும் ஊக்கத் தொகை அனைத்தும், மாணவ/ மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது,

பார்வையில் காணும் அரசாணையில், “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினைக் (ELCOT) கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மேற்கொள்ள அனுமதியளித்தும், அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு ஆதார் தரவு நிறுவனம், ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 5. இந்நிலையில், "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி துவக்க நாளான 06.06.2024 அன்று அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது. இந்நிகழ்வினை, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் துவங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பெறுநர்,

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள். (இ)

நகல்

மாநிலத் திட்ட இயக்குநர்,

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி, சென்னை-6.

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை - 6.

தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-6.

தனியார் பள்ளிகள் இயக்குநர், சென்னை-6.

மேலாண் இயக்குநர்,

தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை - 35.

தங்கள் உண்மையுள்ள,

(ஜெ.குமரகுருபரன்)

பள்ளிக் கல்வி - "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" . அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான ஆணை வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி(அகஇ2)த்துறை

அரசாணை (நிலை) எண்.72

நாள் 11.03.2024

திருவள்ளுவர் ஆண்டு 2055 சோபகிருது வருடம், மாசி 28

படிக்கப்பட்டது:-

மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களின் ந.க.எண்.700/A16/ஆதார்/ஒபக/2024,நாள் 27.02.2024

ஆணை:-

மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மையங்களை பள்ளிகளில் பயிலும் ஆதார் மாணவர்களுக்கான உருவாக்குதல் தொடர்பாக கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவித்துள்ளார்:-

i. பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு அனைத்தும், வருகிறது. இவ்வுதவி மற்றும் ஊக்கத் தொகை பயனாளர்களுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மாணவ, இவ்வாறாக நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அவ்வாறாக மாணவர்களுக்கு புதிதாக ஒரு வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பள்ளிகளில் தனியார் பயிலும் மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 1 முதல் 12 வகுப்பு வரை சுமார் 1.25 கோடி மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் ஆதார் அடையாள அட்டையில்லாத மாணவர்களுக்கு புதிய பதிவினை செய்யும் பணியினை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினை கருத்தில் கொண்டும், ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 17 இலட்சம் மாணவ, மாணவியருக்கு கட்டாயப் புதுப்பித்தல் பணி மேற்கொள்வதை கருத்தில் கொண்டும், இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர். இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI), பதிவாளராக பதிவு பெற்றுள்ளார்.

iii. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் மின்னணு கொள்முதல் செய்து, தமிழ்நாடு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

iv. இப்பணியினை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வகுக்க வேண்டியது அவசியம்.

2. பள்ளிகளில் ஆதார் பதிவினை மாணவர்களின் வயதின் அடிப்படையில் நான்கு நிலைகளில் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

(i) பள்ளிகளில் ஆதார் பதிவு நிலைகள்:

நிலை-1 : 0-5 வயது - புதிய பதிவு:

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) குழந்தை பதிவு சேர்க்கை கொள்கையின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் பண்புக் கூறுகள் அதாவது. கைரேகை மற்றும் கருவிழி படங்கள் பிடிக்கப்படுவதில்லை. பெற்றோரின் ஆதார் விவரங்கள் மற்றும் கைரேகை அங்கீகாரத்துடன் குழந்தையின் முகம் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இவ்வகை புதியப் பதிவுகளை தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த குழந்தை திட்ட பணிகள் இணைந்து துறையுடன் வளர்ச்சி இவ்வகையான பதிவினை மேற்கொள்வது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

(ICDS)

நிலை 2: 5-7 வயது வரை கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல்:

குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். இவ்வகை பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி, பெயர் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.

நிலை -3 : 15-17 வயது: கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல், குழந்தைகள் 15 வயதை அடைந்த பிறகு மீண்டும் நிலையான கைரேகைகள் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், மற்றும் கருவிழிகள்) கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இவ்வகை புதுப்பித்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் இப்புதுப்பித்தலின் போது பிறந்த தேதி, பெயர், முகவரி, அலைபேசி போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எண் கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம். நிலை-4: 7-வயதிற்கு மேற்பட்ட 15-வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல்:

எவ்வித குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு 5-முதல் 7-வயது வரை பதிவு செய்யாமலுள்ள 7. வயதிற்கு மேற்பட்ட 15 வயதிற்குட்பட்ட 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி, பெயர் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.

3. மேலும், இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

4. மேற்காண் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்து அதனை ஏற்று, “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினைக் (ELCOT) கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மேற்கொள்ள அனுமதியளித்தும், அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை(Standing Operating Procedure(SOP)) இவ்வாணையின் இணைப்பில் வெளியிட்டும் அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ஜெ.குமரகுருபரன் அரசு செயலாளர்.

பெறுநர்

மாநிலத் திட்ட இயக்குநர்,

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி, சென்னை-6.

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6.

தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-6.

தனியார் பள்ளிகள் இயக்குநர், சென்னை -6.

மேலாண் இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை-35 பிரிவு அலுவலர்

"பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு”

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP)

அட்டவணை (1) : ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி : கடமைகள் மற்றும் பொறுப்புகள்

(அ) மாநிலத் திட்ட இயக்ககம்:

1. மாநிலத் திட்ட இயக்குநர் ஆதார் பதிவு மேற்கொள்வதற்கான பதிவாளராகச் செயல்படுவார்.

2. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் மேற்கொண்டுள்ள பதிவுகளுக்கான சேவைக் கட்டணத்திற்கான கேட்பினை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு அனுப்பி உரியத் தொகையினை பெற்று வழங்குவார்.

3. கல்வித் தகவல் மேலாண்மை (EMIS) தளத்தில் உள்ள புதிய ஆதார் பதிவு செய்யப்பட வேண்டிய மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டிய குழந்தைகளின் விவரங்களை, மாவட்டங்கள் வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை கண்டறிந்து பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் தனியார் பள்ளி இயக்ககங்களிடம் வழங்கி பள்ளிகளில் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை உறுதி செய்வார்.

4. மாநிலத் திட்ட இயக்ககத்திலுள்ள முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (CTO) கல்வி தகவல் மேலாண்மை அமைப்பில் ஆதார் பதிவு தரவுகள் சார்ந்த உரிய கட்டக அமைப்பை (Module) உருவாக்குதல் இவரது பொறுப்பாகும்.

5. அனைத்து நிலைகளிலும் கல்வித் தகவல் மேலாண்மை தொகுப்பில் இப்பணிகளை கண்காணிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் ஏதுவாக தரவுகளை உள்ளீடு செய்து, தொகுப்பறிக்கை பெறுவதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருவார்.

(ஆ) மாவட்ட திட்ட அலுவலகம்:

1. மாவட்டத் திட்ட அலுலகத்திலுள்ள உதவித் திட்ட அலுவலர் பற்றாளராக (Nodal Officer) செயல்படுவார்.

2. மாவட்ட திட்ட அலுவலகத்திலுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் (EMIS, ICT) மாவட்டத்தில் ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் தங்களது பணியினைத் தொய்வின்றி ஆற்றிடும் வகையில் வட்டார வாரியாக பள்ளிகளில் இப்பணியினை மேற்கொள்ள கால அட்டவணையை வகுத்துக் கொடுப்பவர் ஆவர்.

3. ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் பள்ளிகளுக்குச் செல்லும் முன்பே முன்கூட்டியே வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் மூலமாக உரியப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியினை மேற்கொள்வர்.

4. மாவட்ட அளவிலான ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சார்ந்த பணிகளின் முன்னேற்ற அறிக்கையினை முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஆய்விற்கு சமர்ப்பிப்பர்.

5. ஆதார் பதிவுக் கருவிகள் பழுது ஏற்படுமாயின் மாவட்ட தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மாவட்ட ஒருங்கிணைப்பாளருடன் கலந்து பேசி உடனடியாக பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியினை மேற்கொள்வர்.

6. ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளில் ஏதேனும் தொய்வு ஏற்படின் உடன் அவற்றிற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைக் சரிபார்த்து முழுவீச்சில் பணி நடைபெறுவதை உறுதி செய்வர்.

7. ELCOT தரவு மூலம் தெரிவு செய்யப்படும் நிறுவனம் உள்ளீட்டார்களுக்கு ELCOT நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கான ஆய்வு கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்துதல் உதவி திட்ட அலுவலரின் பொறுப்பாகும்.

(இ)வட்டார வளமையம்:

1. வட்டார வளமைய மேற்பார்வையாளர்,

தமது வட்டாரத்தில் மேற்கொள்ளும் ஆதார் தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைப்பவர் ஆவார். 2. கல்வித் தகவல் மேலாண்மை அமைப்பிலிருந்து பெறப்படும் அட்டவணையை வகுத்துக் தகவல்களின் அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளிலும் பணிகள் தொய்வின்றி நடப்பதற்கான கொடுப்பவர் ஆவார்.

3. பள்ளிகளில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளும் கால அட்டவணையை உள்ளீட்டாளர் முன்கூட்டியே ஆசிரியர் அலுவலர், பயிற்றுநர் மற்றும் தெரிவித்தல், ஆதார் தரவு வட்டாரக்கல்வி தலைமையாசிரிகளுக்குத் உள்ளீட்டாளர்கள், ஆதார் பதிவுக் கருவியினை விடுமுறை நாட்களில் வட்டார வளமையங்களில் ஒப்படைக்கும்போது அதனை பாதுகாப்பாக வைத்திருந்து திரும்ப அவர்களிடமே ஒப்படைக்கும் பொறுப்பு இவரையே சாரும்.

4. வட்டாரத்திலுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் அனைவரும் தத்தமது கண்காணிப்புப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு முன்கூட்டியே அட்டவணையைத் தெரிவிக்கும் பதிவு மேற்கொள்ளும் கால பொறுப்புடையவர். உள்ளீட்டாளர் பள்ளிக்குச் சென்ற பின்னர். தகவல் பள்ளித் தலைமையாசிரியர் இடைவெளி காரணமாக அதற்கான இவ்வசதியினைப் பெற தவறும்பட்சத்தில் முழுப்பொறுப்பையும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஏற்க நேரிடும்.

5. தங்களது வட்டாரத்தில் ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் நாள்தோறும் மேற்கொள்ளும் பணியினை கண்காணிக்கும் பொறுப்பு வளமைய மேற்பார்வையாளரையே சாரும்.

இன்னல்கள் கல்வி 6. பள்ளியளவில் இப்பணிகள் நடைபெறும் நிலையில் இவற்றில் ஏதேனும் ஏற்படின் உடன் சம்பந்தப்பட்ட தலைமையாசிரிகள் / பள்ளி முதல்வர்கள், வட்டாரக் அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மின்னணு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆகியோரை தொடர்புக் கொண்டு எவ்வித தொய்வுமின்றி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு இவரை சார்ந்ததாகும். 7. ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளியிலேயே ஆதார் பதிவு புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் விவரங்கள் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளித் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கும் பொறுப்பு இவரை சாரும்.

8. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் எண் பெறப்பட்டவுடன் அதன் விவரத்தை உடன் EMIS தளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்வதும் இவரது பொறுப்பாகும்.

அட்டவணை (II): பள்ளிக் கல்வி இயக்ககம்:

1. பள்ளிக் கல்வி இயக்குநர் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சார்ந்து EMIS இலிருந்து பெறப்பட்ட முன்னேற்ற அறிக்கையின்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலவலர்களுக்கு கூட்டத்தினை ஆய்வுக் நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

2. இப்பணியினைக் கண்காணிக்கும் பொறுப்பினை இயக்ககத்திலுள்ள ஏதேனுமொரு இணை இயக்குநருக்கு வழங்குதல் வேண்டும்.

3. பணி முன்னேற்றம் குறித்து மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆய்வினை மேற்கொள்ளுதல் (அ) முதன்மைக் கல்வி அலுவலர் 1. வருவாய் மாவட்ட அளவில் இப்பணிகளை ஒருங்கிணைப்பவர் முதன்மைக் கல்வி அலுவலரே ஆவார்.

2. கல்வித் தகவல் மேலாண்மையிலிருந்து விவரங்களைப் பெற்று ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சார்ந்த பணிகளுக்கான கால அட்டவணையை உதவித் திட்ட அலுவலர் மற்றும் மின்னணு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் இணைந்து உருவாக்குதல் வேண்டும்.

3. ஆதார் பதிவு சார்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்திடும் கால முறை ஆய்வுக் கூட்டத்திற்கான விவரங்களை வழங்கிடுவதுடன். பணிகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

4. தங்களது மாவட்டத்திலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை). மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆகியோருடன் கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம் வகுத்தல் வேண்டும்.

5. மாவட்ட அளவில் நடைபெறும் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் ஆதார் பதிவு சார்ந்த விவரத்தினையும் ஒரு கூட்டப் பொருளாக வைத்து விவாதித்தல் வேண்டும்.

6. களஆய்வு மேற்கொள்ளும் போது ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளையும் ஆய்வு செய்தல் வேண்டும்.

(ஆ) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)

1. கல்வி மாவட்ட அளவில் இப்பணிகளை ஒருங்கிணைப்பவர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆவார்.

2. கல்வி மாவட்டத்திலுள்ள அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை இப்பணி நடைபெறுவதை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இப்பணி கண்காணிக்கும் பணி மாவட்டக் கல்வி அலுவலரைச் சாரும்,

3. முதன்மைக் உருவாக்கப்பட்ட கல்வி அலுவலருடன் கால கலந்தாலோசித்து அட்டவணையின்படி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

4. கல்வி மாவட்ட அளவிலான தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் இதனை ஒரு ஆய்வுப் பொருளாக வைத்து விவாதித்தல் வேண்டும். அட்டவணை (III): தொடக்கக் கல்வி இயக்ககம்:

1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி பணி முன்னேற்ற அறிக்கை குறித்து விவாதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சார்ந்து பணிகளை ஒருங்கிணைக்க இணை இயக்குநர் ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமித்தல் வேண்டும்.

(அ) மாவட்டக் கல்வி அலுவலர்: (தொடக்கக் கல்வி)

1. முதன்மைக் கல்வி அலுவலருடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட கால அட்டவணைப்படி பள்ளிகளில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெறுவதை கண்காணித்தல் வேண்டும்.

2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் இப்பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்படின் இவரே முழு பொறுப்பாவார்.

3. வட்டாரக் வளமைய கல்வி அலவலர்கள் மற்றும் வட்டார மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

(ஆ) வட்டாரக் கல்வி அலுவலர் 1. வட்டார அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி தொய்வின்றி நடைபெறுவதற்கு திட்டம் வகுத்து அளிப்பவர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார்.

2. ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிவது சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது இவரது தகவல்களை பொறுப்பாகும்.

3. 0-5 வயதுடைய அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் ஆதார் பதிவு மையத்தினை அணுகி இவ்வசதியினை பெற்றுக் கொள்வதற்கு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும்.

4. குழந்தைக்கு 6 வயது நடைபெறும் போது புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

5. பணி முன்னேற்ற அறிக்கை சார்ந்து மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் உடனுக்குடன் கலந்தாலோசித்தல் வேண்டும்.

6. ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் தமது வட்டார வளமைய பயிற்றுநர்களுடன் பணியினை எவ்வித சிரமுமின்றி ஆற்றிட ஏதுவாக தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கிட அறிவுறுத்தல் வேண்டும்.

7. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் எண் பெறப்பட்டவுடன் அதன் விவரத்தை உடன் EMIS தளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும். அட்டவணை (IV): தனியார் பள்ளிகள் இயக்ககம்:

1. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தனியார் சுய நிதிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் வசதி பள்ளியிலேயே செய்யப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் (தனியார் பள்ளி) பணி முன்னேற்றம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

தங்களது

2. மாவட்டக் கல்வி அலுவலர் : (தனியார் பள்ளிகள்)

கட்டுப்பாடில் செயல்படும் தனியார் பள்ளிகளை மழலையர் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் மற்ற வாரியங்களுடன் இணைவு பெற்ற பள்ளிகள் அனைத்திலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்படும் என்பதால், இதற்கான செயல் திட்டம் ஒன்றினை வகுத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் தெரிவித்திடும் பொறுப்பு இவரையே சாரும்.

அட்டவணை (V) அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்:

1. தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் தமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் பொறுப்பு உடையவர் ஆவார். ஆதார் தகவல் உள்ளீட்டாளர்கள் வருகை

2. முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களால் நிர்ணயிக்கபட்ட கால அட்டவணையின்படி தங்களது பள்ளிக்கு தரும் போது அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பதிவு மற்றும் புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள ஏற்பாடு செய்தல் இவரது பொறுப்பாகும்.

3. 0-5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான புதிய பதிவு, 6-7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், 7 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், 15 வயது பூர்த்தி செய்த குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றினை எவ்வித கட்டணமின்றியும் மற்றும் மாணவர்களுக்கு எவ்வித சிரமமுமின்றி ஏற்படுத்திக் கொடுப்பது தலைமையாசியர்கள், முதல்வர்களின் பொறுப்பாகும். 4. 0-5 வயது உடைய குழந்தைகள் இச்சேவையினை பயன்படுத்தி கொள்ள ஏதுவாக பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு தகவல் அளித்தல் வேண்டும். 5. மாணவ மாணவியர்கள் ஆதார் புதுப்பித்தலின்போது முகவரியில் திருத்தங்கள் மேற்கொள்ளத் தேவையான படிவத்தினை EMIS தளத்தில் கண்டறிந்து தேவையான தரவுகளை உள்ளீடு செய்து, அவ்வாறு உள்ளீடு செய்யப்பட்ட படிவத்தினை பதிவிறக்கம் செய்து சார்ந்த மாணவரது புகைப்படத்தினை ஒட்டி தலைமையாசியர்கள் / முதல்வர்கள் சான்றொப்பமிட்டு வழங்கிடல் வேண்டும்.

6. ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளும் பணியானது அந்தந்தப் பள்ளியிலுள்ள தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின் மேற்பார்வையிலுள்ள அறையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

7. புதிய ஆதார் பதிவு மேற்கொண்ட பின்னர் ஆதார் எண் பெறப்பட்டப் பிறகு அதன் விவரங்கள் உடனடியாக EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும்.

அட்டவணை (VI) தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 1. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆதார் பதிவு மேற்கொள்ளும் முகமையாக செயல்படும்.

2. முகமையைச் சார்ந்த துணை மேலாளர் மற்றும் மாநில அடிப்படையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கல்வித் தகவல் மேலாண்மையிடமிருந்து பெறப்படும் விவரங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணிகள் மேற்கொள்வது குறித்து திட்டம் வகுத்து அளிப்பார்.

3. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ள 770 ஆதார் பதிவுக் கருவிகளையும் பயன்படுத்துவதற்கு தகுதியான தரவு உள்ளீட்டாளர்களை தெரிவு செய்து பயிற்சி வழங்கி இப்பணிக்கு அமர்த்தும் பொறுப்பு துணை மேலாளர், மாநில ஒருங்கிணைப்பாளரை சார்ந்ததாகும். உரிய தெரிவுசெய்யப்பட்ட பயிற்சி பெற்ற நபர்களையே இப்பணிக்கு அமர்த்துதல் வேண்டும்.

4. கூடுதலாக ஆதார் பதிவுக் கருவிகள் தேவைப்படின் மாநிலத் திட்ட இயக்குநருக்கு மின்னணு நிறுவன மேலாண் இயக்குநர் வழியாக தேவைப் பட்டியல் சமர்ப்பித்தல் இவரது பொறுப்பாகும்.

5. அனைத்து ஆதார் பதிவு செய்யும் கருவிகளை ஆய்வு செய்து பழுதுகள் சரிபார்த்தல், முற்றிலும் பழுதான கருவிகளை மாற்றம் செய்தல் மென்பொருள் புதுப்பித்தல் போன்ற பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள வழிவகுக்கும் பொறுப்பு துணை மேலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளரை சார்ந்ததாகும். 6. பள்ளிகளில் புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிவர்தனைகளுக்கான கேட்புத் தொகையை தொகுத்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு அனுப்பி அதனை பெற்றுத் தர ஏதுவாக உரிய படிவத்தில் ஒவ்வொரு மாதமும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநருக்கு அனுப்பிடும் பணியினை மின்னணு நிறுவன துணை மேலாளர் மேற்கொள்வார். 7. மின்னணு நிறுவன ஆதார் பதிவு மேற்கொள்ளும் உள்ளீட்டாளர்கள் குழுவானது தேவையான கருவிகளுடன் மாவட்ட அளவில் வகுக்கப்பட்ட அட்டவணையின்படி பள்ளி வளாகத்திற்குச் சென்று இப்பணியினை மேற்கொள்வதற்கான மேற்கொள்வதற்கான முழுமையான திட்டமிடுதலை மாநில ஒருங்கிணைப்பாளரே மேற்கொள்வார்.

8. ஒவ்வொரு தரவு பணிநாளின் முடிவிலும் அந்தந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை EMISக்கு பகிர்ந்திடும் பொறுப்பு இவரைச் சாரும். ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணியினை தடையின்றி செயல்படுத்த மாவட்ட அளவிலான வட்டார அளவிலான பொறுப்பாளர்களை நியமித்து பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு மேலாளர் மற்றும் மின்னணு நிறுவன துணை ஒருங்கிணைப்பாளரைச் சார்ந்ததாகும்.

9. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று தாமதமின்றி மேற்காணும் பணிகளை மேற்கொள்ள தேவையான நெட்வொர்க் தொடர்பு தரநிலை (LTE/4G/5G) வசதிகள் உடைய டாங்கிள் (Dongle) கருவி ஒன்றையும் உள்ளீட்டாளர்களுக்கு ஆதார் தரவு பணிகள் வழங்கி தொய்வின்றி 14 நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு மின்னணு நிறுவன துணை மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைச் சார்ந்ததாகும். CLICK HERE TO DOWNLOAD D.O. Letter for Aadhaar Registration and Renewal at schools PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.