பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 17, 2024

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை.

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை.

முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரசாரம் நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரசாரம் பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இளைஞர்களிடம் ஓட்டு சேகரிக்கும் வகையில், அவர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலம், தேர்தல் பிரசாரம் செய்வது அதிகரித்துள்ளது.

இதன் மூலம் குறிப்பிட்ட தகவல்கள் அதிகப்படியான நபர்களுக்கு சென்று சேர்வதுடன், செலவுகளும் குறைவு; இந்த வகை பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே அந்தந்த கட்சிகள் தங்களின் தொழில்நுட்ப அணியின் உதவியுடன் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கிடையே நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அதன்பிறகு கட்சிகள் பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை மாலை 6 மணி வரை மட்டுமே ஓட்டு சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மேல் பிரசாரத்தை பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*நாளை மாலை 6:00 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில்* *பிரச்சாரத்தை பகிர்ந்தாலும்* *தண்டனை - தேர்தல்* *ஆணையம் எச்சரிக்கை.*

*குழு உறுப்பினர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும்*

தேர்தல் நாளுக்கு 72 மணிநேரம் முன்னதாக பின்பற்றப்படவேண்டிய தேர்தல் நடத்தை விதிகள்

72 மணிநேரம்

ஒவ்வொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும், வேட்பாளாது முதன்மை முக்கர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும் வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கோரும்பட்சத்தில் அக்கட்சியினை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட எதுவாக, ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும் மேற்படி வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்.

அரசியல் ஈார்ந்த நிகழ்வுகளுக்கு கீழ்கண்டுள்ள வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

Pilot Cars

Cars with beacon lights of any colour

Cars affixed with sirens of any kind.

வாக்கப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபக்கூடாது.

தனிநபரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் மொத்தமாக Bulk SMS அனுப்புவதோ மற்றும் Voice Message அனுப்புவதோ கூடாது. 48 மணிநேரம்

அனைத்து வேட்பாளர்களும் 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை Φωνή. (17.04.2024-06.00 PM Onwards) 48 நோத்திற்கு முள்ளதாக ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.

வெளியூரிலிருந்து பிச்சாரத்திற்காக வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய பாராளுமனிற தொகுதியில் வாக்குரிமை இல்லாதார்கள் தொடந்து இப்பாராளுமன்ற தொகுதியில் இருக்க அனுபதியில்லை.

ஐந்து நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதியில்லை.

மூன்றாவது முறையாக வேட்பாளர்கள் தங்களது குற்றப்பிள்ளணி குறித்தான விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சியில் 17.04.2024 க்குள் அளிக்கப்பட்ட காலக்கெடு 08042024 முதல் 17.04.2024 ] அளித்து இவ்வலுவலகத்தில் தாக்கல் செய்திட வேண்டும்.

24 மணிநேரம்

அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சிகட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருப்பின், MCMC குழுவினரிடம் 48 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும்

உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவுலிக்கப்படும் வரை கொண்டு செய்யவும், பயார்படுத்தவும் அனுமதி இல்லை.

தேர்தல் நாளன்று

வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனத்திற்கு மட்டுயே அனுமதி உண்டு.

ஓட்டுநர் உள்பட ஐந்து பேருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு.

வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகளத்தில் வேறு நபர்கள் செல்ல அனுமதி இல்லை.

தேர்தல் நடத்தும் அலுவாசிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகணத்தில் தெளியாக தெரியும்படி ஒட்டப்பட டும்.

வாக்காளரை வாக்களித்திட வாக்காளரின் இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ வாக்குச்சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்து செல்ல வா வசதி ஏற்படுத்தி தரக்கூடாது.

மேற்கண்டுள்ள அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி செல்ல கூடாது.

வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி மற்றும் Mega phones பயன்படுத்தக்கூடாது

ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நாள்ன்று பிற்பகல் 03.00 மணிக்கு முகவர்கள் மாற்ற செய்ய அனுமதியில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.