மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) புதுக்கோட்டை
சுற்றறிக்கை
புதுக்கோட்டை கல்வி மாவட்டம் (தொடக்கக் கல்வி) அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.
ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு 6ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணி நிமிர்த்தம் காரணமாக அம்மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இம்மாணவர்களுக்கு மீண்டும் 2204 2024 அன்று அறிவியல் மற்றும் 23.04.2024 அன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
இவ்வகுப்பு மாணவர்களுக்கு 24.04.2024 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர் சேர்க்கை விடைத்தாள் மதிப்பீடு செய்தல் மற்றும் பிற பணிகள் (smart class hi tech lab அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
Saturday, April 13, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.