மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு - Admission Drive - Guidelines - 01.04.2024 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 1, 2024

மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு - Admission Drive - Guidelines - 01.04.2024 - PDF



Director of Elementary Education - Admission Drive - Guidelines - 01.04.2024 - PDF மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு - Admission Drive - Guidelines - 01.04.2024 - PDF

மாணவர் சேர்க்கை -2024-25 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை- தொடர் நடவடிக்கை மற்றும் துரிதப் படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.. அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைப் பணிகளை 01.03.2024 முதல் தொடங்கிட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து SNA A / c ல் ரூ .2,000 / - விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டதுm

அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நடப்பாண்டில் நிறைவு செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கை செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது....

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6.

ந.க.எண். 003845 / ஜெ2 / 2024,

நாள்.01.04.2024 பொருள் :

பார்வை :

தொடக்கக் கல்வி - 2024-2025ஆம் கல்வி ஆண்டு 01.03.2024

முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர் நடவடிக்கை மற்றும் துரிதப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக 1. சென்னை

6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், ந.க.எண்.079119/எம்/இ1/2023, நாள்.26.02.2024 2. சென்னை

- 6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 003845 / ஜெ2 / 2024,நாள். 29.02.2024 3. சென்னை

6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 003845 / ஜெ2 / 2024, நாள். 01.03.2024

4. அரசாணை (நிலை) எண். 81, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள்.15.03.2024

பார்வை (1)ல் காணும் செயல்முறைகளில் அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைப் பணிகளை 01.03.2024 முதல் தொடங்கிட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

பார்வை (2)ல் காணும் செயல்முறைகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து SNA A/cல் ரூ.2,000/- விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.

பார்வை (3)ல் காணும் செயல்முறைகளில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நடப்பாண்டில் நிறைவு செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கை செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

பார்வை (4)ல் காணும் அரசாணையில் மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. 2024 - 2025ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளில் 01.03.2024 முதல் 31.03.2024 முடிய 2,90,601 மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கை ஆகியுள்ளனர். இதற்காக சிறந்ததொரு ஒத்துழைப்பினை நல்கிய மாவட்ட ஆட்சியர்கள், திட்டமிட்டு பணி செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியப் பெருமக்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

"2024-25ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவ - மாணவியர்களை சேர்க்கை செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது."

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநரகத்தில் இருந்து 5+ வயதினை நடப்பாண்டில் நிறைவு செய்யும் 3,31,548 குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் Project-wiseஆக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) ஏற்கனவே சார்பு செய்யப்பட்டு உள்ளது. அவ்விவரங்களைக் கொண்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்திடவும், வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திடவும் சார்நிலை அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

இதுவரை சேர்க்கை செய்யாத 5+ வயதுடைய அங்கன்வாடி மையக் குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை அணுகி உடனடியாக அருகாமை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை செய்ய வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் மாவட்டக் கல்வி அலுவலர்களால் (தொடக்கக் கல்வி) வழங்கப்பட வேண்டும். தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளின் புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட புள்ளி விவரங்களில் இருந்து அக்குழந்தையின் பிறப்பிடம், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், பெற்றோர்/ பாதுகாவலர் கைபேசி எண் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு அந்த விவரங்கள் ஒன்றிய வாரியாக தொடர்புடைய பள்ளிகளின் EMIS log inக்கு Map செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் அவர்களின் பள்ளி EMIS+ log in-ல் உள்நுழைந்து 5+ வயதினை அடையும் குழந்தைகளின் பெற்றோர்களின் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அங்கு இடம்பெற்றுள்ள வினாப்பட்டியில் உள்ள விவரங்களுக்கான பதில் விவரங்களைப் பெற்று உள்ளீடு செய்ய வேண்டும்.

அதாவது, 1. தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கை செய்துவிட்டீர்களா என்பதை முதலில் கேட்க வேண்டும்

2. சேர்க்கை செய்துவிட்டார்கள் எனில், எந்தப் பள்ளியில் சேர்க்கை செய்துள்ளார்கள் என வினவ வேண்டும் (அரசுப் பள்ளி / அரசு உதவிபெறும் பள்ளி / தனியார் பள்ளி)

3. சேர்க்கை செய்யவில்லை எனத் தெரிவிக்கும் பெற்றோர்களிடத்தில் அவர்களின் குழந்தைகளை தங்களின் (அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி) பள்ளியில் சேர்க்க உரிய ஆலோசனைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் வழங்க வேண்டும்

மேலும், அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் பல்வேறு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகைகள், தங்கள் பள்ளிகளில் உள்ள சிறப்பம்சங்கள், வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms) ஏற்படுத்தப்பட உள்ளது என்றும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் (HI-Tech Labs) ஏற்படுத்தப்பட உள்ளது என்றும், அதற்குத் தேவையான இணையதள (Broadband Internet) வசதியும் வழங்கப்பட உள்ளது என்றும் அனைத்து அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் கையடக்கக் கணினி (TAB) வழங்கப்பட உள்ளது என்றும் விளக்கமாக எடுத்துக்கூறி அம்மாணவர்களை தங்கள் பள்ளிகளில் சேர்க்கை செய்திட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு உரிய தகவல்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) வழங்கிட வேண்டும். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வழங்கிய குழந்தைகளின் விவரங்களின் அடிப்படையில் அக்குழந்தைகளின் பெற்றோர்களிடத்தில் 14417 அழைப்பில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேச துறையால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

எனவே 5+ வயதினை நிறைவு செய்யும் அனைத்து மாணவர்களையும் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முறையாக சேர்க்கை செய்திட வட்டாரக் கல்வி அலுவலர்கள், EMIS மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தியும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும் சேர்க்கைப் பணிகளைத் துரிதப்படுத்தவும் நடப்புக் கல்வியாண்டின் கடைசி வேலை நாளான 12.04.2024க்கு முன்னர் 4 லட்சம் மாணவர்களை சேர்க்கை செய்ய இலக்கு நிர்ணயித்து பணிபுரியவும் அவ்வாறு சேர்க்கை ஆகும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் உடனுக்குடன் கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

EMIS எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.