பள்ளி இறுதித்தேர்வு கால அட்டவணை மாற்றம் Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 22, 2024

பள்ளி இறுதித்தேர்வு கால அட்டவணை மாற்றம் Proceedings

பள்ளி இறுதித்தேர்வு கால அட்டவணை மாற்றம் (5.4.2024 Proceedings)

காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (பொ) (தொடக்கக் கல்வி செயல்முறைகள் 15.85.6161.1081/16/2024, пой. 05.04.2024

காஞ்சிபுரம் மாவட்டம் - 2023 - 2024 ஆம் கல்வியாண்டு -4 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வுகள் கால அட்டவணை மாற்றம் அறிவுரை வழங்குதல்- சார்ந்து,

பார்வை:

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்.19528/எம்/இ1/2023, நாள்.29.03.2024.

2. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.3171/ஆ4/2023, நாள்.01.04.2024. பார்வை (1) இல் காணும் செயல்முறைகளின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், 2023 - 2024 ஆம் கல்வியாண்டு 4 முதல் 9 வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துதல் சார்ந்து கீழ்க்கண்டவாறு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி இறுதி தேர்வு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024 ஆம் தேதிக்கும், 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குறிப்பிட்ட தேதிகளில் தேர்வுகளை நடத்திட அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைவதால் ஆறாம் தேதி முதல் அந்தக் மாணவர்களுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.

நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.

அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் நான்கு மற்றும் ஐந்து வகுப்பு ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய மைகையில் தெளிவாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம். தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி, promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.

மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.