17.04.24 நாளை பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 16, 2024

17.04.24 நாளை பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை!!!



17.04.24 அன்று பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை!!!

வரும் 19.4.24 அன்று பாராளுமன்றத் தேர்தல் பணி மற்றும் 18/4/2024 அன்று தேர்தல் வகுப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு நாளைய தினம் 17.04.24 அன்று பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க கோரி மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மதிப்பு மிகு தேர்வுத்துறை இயக்குநர் அவர்களிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

CLICK HERE TO DOWNLOAD Election Leave dir Letter PDF மாநில மையம்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு



ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக நாளை ( 17.04.24 புதன்கிழமை ) ஒரு நாள் விடுமுறை அளிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை CLICK HERE

ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக நாளை ( 17.04.24 புதன்கிழமை ) ஒரு நாள் விடுமுறை அளிக்க நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை CLICK HERE *TGTAசெய்திகள்*

🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️

*பதிவு எண் 115/2023*

💐💐💐💐💐💐💐💐💐

*அனைத்து நிலை பள்ளிகளுக்கும் ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும்*

*நாளை 17.04.24 புதன்கிழமை ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து நிலை பள்ளிகளுக்கும் ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டுதல்.*

*அதே போல் அனைத்து பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு* *மையங்களுக்கும்* *(10,11) ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்*.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் நடைபெற்று வருகின்றன.

அதில் தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. அதேபோல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளும் தமிழ்நாடு முழுவதும் 86 மையங்களில் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு பாராளுமன்ற தேர்தல் முக்கியமான நிகழ்வான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தும் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது

இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வருகின்ற

18.4.24 வியாழன்,

மற்றும்

19.4.24 வெள்ளி

ஆகிய தேதிகளில் தேர்தல் பணி இருப்பதால்

அதற்கு ஆயத்தமாக தமிழகம் முழுவதும் 17.4.24 புதன் அன்று +1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும் ஒருநாள் விடுமுறை விட வேண்டும்.

என பல மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் புதன்கிழமை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலை பள்ளிகளுக்கும் விடுமுறை விட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் ஏனென்றால் வருகிற புதன்கிழமை மாலை வரை பள்ளிகளிலும், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களிலும் ஆசிரியர்கள் இருந்துவிட்டு அதற்குப் பிறகு வீட்டிற்கு சென்று மறுநாள் காலை

வாக்குச்சாவடி முகாம்களுக்கு ஆசிரியர்கள் செல்ல உள்ள நிலையில் அதற்கான ஆயத்த ஏற்பாடுகளான உணவு, உடை,மருந்து, உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி வாக்குச்சாவடி மையத்திற்கு செல்வதற்கு அவசரகதியிலும் பதட்டத்துடன் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளக்கூடிய சூழல் உள்ளது

*எனவே நாளை மறுநாள் புதன் 17.04.24 அன்று ஒரு நாள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலை பள்ளிகளுக்கும், அனைத்து நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கும் பொது விடுமுறை விட வேண்டும்*.

இது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஒரு உற்சாகத்தை, ஊக்கத்தை, ஒரு ஓய்வை,

ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தும்.

எனவே இதுகுறித்து ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகளை தாங்கள் பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️

கபிலர்மலை செந்தில்

மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்

தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.