DSE - Join Sitting Proceedings - கடந்த கால தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் - கூட்டமர்வு (Join Sitting) நடத்துதல் - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 12, 2024

DSE - Join Sitting Proceedings - கடந்த கால தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் - கூட்டமர்வு (Join Sitting) நடத்துதல் - DSE செயல்முறைகள்!



கடந்த கால தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் - கூட்டமர்வு (Join Sitting) நடத்துதல் - DSE செயல்முறைகள்! Addressing Past Audit Obstacles - Conducting Join Sitting - DSE Processes!

பள்ளிக் கல்வி - அகத் தணிக்கை - கூட்டமர்வு (Join Siting) கடந்த கால தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்தல் மாவட்ட வாரியாக தணிக்கை கூட்டமர்வு நடத்துதல் – தயார் நிலையில் ஆவணங்கள் வைத்திருத்தல்-சார்பு. இவ்வியக்கக செயல்முறைகள். நாள்.07.12.2022

ந.க.எண்.073438/அகத/2022,

தமிழ்நாட்டில் உள்ள அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் இதர சார்ந்த அலுவலகங்களில் கையாளப்படும் வரவு செலவு கணக்குகள் மற்றும் பணியமைப்பு சார்பான விவரங்கள் (Accounts and Service Matters) g துறை அகத்தணிக்கை மூலம் எழுப்பப்பட்ட தணிக்கை தடைகளை, அவ்வப்போது மாவட்ட வாரியாக தணிக்கை கூட்டமர்வு நடத்தி, தடை நிவர்த்தி (On the spot Ratification) மேற்கொள்வதோடு நேரடியாக பெறப்படும் தணிக்கை தடை கருத்துருக்களை நிவர்த்தி செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீண்ட கால தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர் வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி பொதுத் தேர்வுக்கு பின்னர் 15.04.2024 முதல் மாவட்ட வாரியாக தணிக்கை கூட்டமர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகள், நிறுவனங்கள் (ம) இதர அலுவலகங்கள் சார்பாக முந்தைய காலங்களில் துறை தணிக்கை மூலம் எழுப்பப்பட்ட தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தொடர்புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கூட்டமர்வு நடத்த உத்தேசிக்கப்பட்ட காலத்திற்கு முன்னர் இடைப்பட்ட காலங்களில் வழக்கம்போல் (as usual) தணிக்கை தடை நிவர்த்தி கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி நிவர்த்தி செய்ய சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது நடப்பாண்டில் 15 ஏப்ரல் 2024க்கு பிறகு உத்தேசிக்கப்பட்டுள்ள மாவட்ட வாரியாக தணிக்கை தடை நிவர்த்தி இணையமர்வு கூட்ட கால அட்டவணை (Schedule) விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DSE - Join Sitting Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.