2024 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத்திட்டம் - முதலமைச்சருக்கு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 10, 2024

2024 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத்திட்டம் - முதலமைச்சருக்கு வேண்டுகோள்

2024 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத்திட்டம் - முதலமைச்சருக்கு வேண்டுகோள் Old Pension Scheme in Financial Statement 2024 - Request to Chief Minister



ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி

~~~~~~

2024 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டுவருவதற்கான அறிவிப்பு இடம்பெற செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வேண்டுகோள் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அப்போதய அதிமுக அரசால் மத்திய அரசு கொண்டுவருவதற்கு முன்பே பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தினர் இதனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டு இன்றுவரை இதற்கான தீர்வு எட்டப்படவில்லை , இதனால் பல போராட்டங்களை நடத்தி உயிர் தியாகம் பணியிடை நீக்கம், பணி நீக்கம் , வழக்குகள் பணியிட மாற்றம் , பதவி உயர்விற்கு தடை என போராடும்போதெல்லாம் இதுபோன்ற இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்,

2004ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்திய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் திட்டமான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்த்து நடைமுறை படுத்தியது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகின்ற இத்திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய கேட்டுக்கொண்டோம் அந்தனையேற்று சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தீர்கள் , கொரோனா கொடுந்தொற்றால் நிதிநிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து தாமதமானது தற்போது நிதிநிலைமை படிப்படியாக சீராகிவருகிறது, மேலும் காங்கிரஸ் ஆண்ட மாநிலமான ராஜஸ்தான் , காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலமான உத்தரகாண்ட், கர்நாடகம், உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்த்திட்டம் நடைமுறை படுத்தி உள்ளனர்,ஏற்கனவே மேற்கு வங்கம் கோவா ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியமே தொடர்கிறது இந்த மாநில்களை போன்று தமிழ்நாட்டிலும் நடப்பாண்டிலேயே நிதிநிலை அறிக்கையிலேயே இடம்பெற செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து பழைய ஓய்வுதியத்திட்டதை கொண்டுவர அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலராக திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறு உருவம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக வழி நடத்தும் இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு ஊதியம் வழங்குதல் , இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம், பகுதிநேர சிறப்பாசியர்களை பணி நிரந்தரம் செய்தல் , வார்த்தில் ஐந்து நாடகளும் வேலை நாட்களாக அறிவித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை , கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம ஊதவியாளர்கள் , மருத்துவத்துறை பன்நோக்கு பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில. கொண்டுவருதல் , ஊர்புர நூலகர்கள் பணி நிறந்தரம், ஊள்ளாட்சித்துறையில் பணியாற்றும் குடிநீர் ஏற்று எந்திர பராமரிப்பவர்ரகளை நிரந்தரம் செய்தல், நூலகர்களை பணிநிரந்தரம் செய்தல், மேற்படிப்பிற்கான ஊக்க தொகையை ஏற்கனவே இருந்ததை போன்று ஊக்க ஊதியமாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.