11.12.2023 அன்று பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?.. வழிகாட்டுதல்கள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 8, 2023

11.12.2023 அன்று பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?.. வழிகாட்டுதல்கள் வெளியீடு



பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?.. வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி நேற்று வெளியிட்ட அறிக்கை:

பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சுற்றுச்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிகளுக்கு தேவையான வேறு சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். Schools Re-opening - DSE Proceedings - CLICK HERE TO DOWNLOAD PDF பொருள்: பள்ளிக் கல்வி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மைச்சாங் புயலுக்குப் பின்னர் பள்ளிகள் திறத்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

மைச்சாங் புயல் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் எதிர்வரும் 11.12.2023 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கீழ்க்கண்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகிறது. தலைமை ஆசிரியர்கள் 08.12.2023 முதல் பள்ளிகளுக்குச் சென்று பள்ளிகள் திறக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகம் முழுமையாக துாய்மை செய்தல் வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்கள் ஏதேனும் இருப்பின் அவை அகற்றப்படுதல் வேண்டும்.

தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களையும், கட்டட இடிபாடுகளையும் அகற்றிட வேண்டும் மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைப்பதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லதவாறு கண்காணிக்க வேண்டும். மேலும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பின் மாணவர்கள் அத்தகைய கட்டிடங்களை அணுகாதவாறு அதனைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திட வேண்டும்.

பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும், அறைகளையும் துாய்மைப் படுத்த வேண்டும். அறையில் இருக்கும் ஒட்டடைகளை அகற்றி, கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுதல் வேண்டும். வகுப்பறைகளில் உள்ள கதவு, ஜன்னல், பெஞ்ச் டெஸ்க் போன்றவற்றை சரி செய்து வர்ணம் பூச நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பூஞ்சைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து கொடிய விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். - கழிவறைகளின் கதவுகளை சரிசெய்து, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கழிவறைகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும்.

விளையாட்டுத் திடலை மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றிட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்வதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி துாய்மைப்படுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்

மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்பு கொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கித் தரும்பொருட்டு வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின்விசிறி, மின்விளக்கு மற்றும் மின் இணைப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.

கட்டடங்களின் மேற்கூரைகள் சுத்தம் தேங்காவண்ணம் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும் செய்யப்பட்டு மழைநீர் பள்ளி கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் பராமரிக்கப்பட்டு பயன்படும் நிலையில் இருத்தல் வேண்டும். சத்துணவு சமைக்கும் இடத்தை வெள்ளையடித்து, அடுப்புகளை சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஒத்துழைப்பை பெற்று பள்ளிகளில் தேவைப்படும் வேறு சில அத்தியாவசியப் பணிகளை மே

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.