TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 6, 2023

TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு...



TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு...

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் . 03/2023 , நாள் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் , மிக்ஜாம் ( Michaung ) புயல் மழையின் காரணமாக மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 07 : 12.2023 -லிருந்து 13.122023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதனைதொடர்ந்து , விண்'ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 14.12.2023 மற்றும் 15.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.