ஜன 12-இல் TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 16, 2023

ஜன 12-இல் TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள்

இந்திய அளவில் ‘we want group 2 results’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற முழக்கத்துடன் எக்ஸ் தளத்தில் தேர்வர்கள் பதிவிட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 2 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் 10 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜன 12-இல் TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள்



ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2, மற்றும் 2a தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் விளக்கம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் மூலம் தமிழகஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5,097 உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கான முதன்மை தோ்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.  

ஆனால், 9 மாதங்களாகியும் இதுவரை தோ்வு முடிவுகள் வெளியாகவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த நிலையில் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.