2023-2024ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி காமராஜர் விருது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 17, 2023

2023-2024ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி காமராஜர் விருது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



2023-2024 Kamaraj Award for Best School – Director of Elementary Education Proceedings 2023-2024ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி காமராஜர் விருது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2023-2024ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது - காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள் - தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.25000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.50000 சிறப்பு பரிசளிப்புத் திட்டம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்: 021374/ ஜே4/ 2023, நாள்: 07-12-2023

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.021374/ஜெ4/2023,நாள் 7 .12.2023

பொருள்

தொடக்கக்கல்வி 2023-2024 ஆம் கல்வியாண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட அனுமதியும் சிறப்பு பரிசளிப்புத் திட்டம் மாவட்டத்திற்கு 75,000 வீதம் 38 மாவட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிடுதல் சார்பு.

பார்வை

1. அரசாணை (நிலை) எண்.169 ப.க.(என்)துறை நாள் 06.07.2012.

2. அரசாணை (நிலை) எண்.123 பள்ளிக்கல்வி (ப.க.5(1)த் துறை நாள்.15.07.2013,

3 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.008684/C-1/2023, நாள்.17.04.2023.

4. அரசாணை (நிலை) எண்.10, பள்ளிக் கல்வி (பொது 1(2) துறை, நாள் 11.01.2023.

5. அரசுக் கடிதம் (நிலை)எண். efile 11915/பொது1(2) 2023-1, நாள்.24.11.2023.

பார்வை 1-இல் காணும் அரசாணையில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது சார்ந்த. 2012-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்காண் விழாவிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான "பரிசளிப்பு திட்டம் ( (Award Scheme)" ஒன்றினை ஏற்படுத்தவும், அத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்திடவும் உரிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2023-2024 ஆண்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த மாவட்டத்தில் உள்ள சிறந்த ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) என பரிசுத் தொகை கணக்கிட்டு38 மாவட்டங்களில் உள்ள 38 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் காமராசர் பிறந்த நாள் சிறப்பு பரிசளிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்குவதற்கான ஆணையும் அனைத்துப் பள்ளிகளிலும் அரசின் சார்பில் விழா கொண்டாட அனுமதியும் வழங்குமாறு ஆணை வெளியிடக்கோரி, பார்வை 3-ல் காணும் இவ்வியக்ககத்திலிருந்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி சார்பில் கொண்டாடும் வகையில் அரசின் அனைத்து நாளாக பள்ளிகளிலும் விழாவினை சிறப்பாக நடத்திட அனுமதியும், வருவாய் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளியினை தேர்வு செய்து பரிசுகளை வழங்கிடவும், தொடக்கக் கல்வித் துறைக்காக ரூபாய் 28,50,000/- நிதி ஒதுக்கீடு செய்து பார்வை 3-இல் காணும் கடிதத்தின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு பிரித்து உரிய பொருட்டு மேற்கொள்ள வழங்கிடும் நடவடிக்கை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பார்வை 5-இல் குறிப்பிட்ட அரசுக் கடிதத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதொகையினை கீழ்க்கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாரியாக பகிர்ந்து அளித்து ஆணையிடப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - PDF

(ரூபாய் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் மட்டும்)

மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்கு தலைப்புகளின் கீழ்பற்று வைக்கப்பட வேண்டும் என அறிவிக்கலாகிறது. தொடக்கக் கல்வி இயக்ககம் - ரூ.28,50,000/- இலட்சம் 2202-பொதுக்கல்வி -01 தொடக்கக்கல்வி-800 ஏனைய செலவு-மாநிலச் செலவினங்கள்-AV- சிறந்த பள்ளிகளுக்குப் பரிசு - 359 பரிசுகளும் வெகுமதிகளும்-01 பரிசுகளும் வெகுமதிகளும் ' (த.தொ.கு.2202-01-800-AV-35901)

மேற்படி, ஒப்பளிக்கப்பட்ட செலவினத் தொகையினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் பெற்று சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மூலம் வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், மேற்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுவதையும் செலவு செய்து, அதன் தொடர்புடைய பயன்பாட்டு சான்றினை 31.03.2024-க்குள் உரிய ஆதார ஆவணங்களுடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(Utilization Certificate) மற்றும் மேலும், கல்வி வளர்ச்சி நாளிற்கான சிறப்பு பரிசளிப்புத் திட்ட கல்வி வளர்ச்சி பணிகளுக்காகவும் தொகைக்காகவும் வழங்கப்படும் இத்தொகையினை அதன் பயன்பாட்டிற்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதையும் இதர பயன்பாட்டிற்காக கண்டிப்பாக பயன்படுத்த கூடாது எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.