IISF- 2023 - ஆசிரியர்கள் பங்கேற்பது இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 4, 2023

IISF- 2023 - ஆசிரியர்கள் பங்கேற்பது இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் - Proceedings



அறிவியல் விழா ( IISF- 2023 ) - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்பது இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் - CEO Proceedings

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் , சென்னை - இந்தியா அனைத்துலக அறிவியல் விழா ( IISF- 2023 ) - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்பது இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் தொடர்பாக தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



சென்னை-25, செயல் இயக்குநர். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் கடித எண்.2225/பி1/2023 நாள்.23,112023 பார்வையில் காணும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குநர் அவர்களின் கடிதத்தில், ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மூலமாக INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL-2020 என்ற நிகழ்வானது. 2024 ஒனவரி திங்கள் 17 முதல் 20 வரை ஹரியானாவில் உள்ள பரீதாபாத் என்ற நகரில் நடைபெற உள்ளது. Ministry of Science and Technology. Ministry of Earth Sciences, Vijnana Bharathi. National Innovation Foundation (NIF India)ஆகிய துறைகள் இணைந்து இற்நிகழ்வை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பணிமனை ஒன்று நடைபெற உள்ளது.

இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், கருத்துக்களை வலியுறுத்துதல் மற்றும் கல்வி சம்பந்தமான சிக்கல் தீர்க்கும் திறன்களை ஊக்குவித்தல் என்பது இதன் நோக்கமாகும். இதன் பங்கேற்பாளர்கள் கற்பித்தல் முறைகள் மற்றும் செயல்பாடு சார்ந்த கற்றலில் புதுமைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இதில் நடைபெற உள்ள குழு விவாதங்கள் அறிவியல் கல்வியின் பல்வேறு அம்சங்கனை உள்ளடக்கும். விரிவான கற்றலுக்கான பயனுள்ள கருவிகள் உட்பட அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நேசத்தை கட்டி எழுப்புவதற்கான ஒரு வழிமுறையாக அறிவியல் கல்வியை பயன்படுத்துவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது. இங்கு விவாதங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் அறிக்கைகள் வெளியிடப்படும்.

அதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் இதில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். எனவே ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆணையின்படி விரைவில் 90-17-2023 அன்றுக்குள். https://www.scienceindiafest.org/ என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவியல் பட்டதார் ஆசிரியர்கள் அவ்விணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது,

மேலும் விவரங்களுக்கு ஒன்றிய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கடிதம் இத்துடன் இணைத்து அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அணுப்பி வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.