மிச்சாங் புயல் பாதிப்பு எதிரொலி- 11ம், 12ம் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 5, 2023

மிச்சாங் புயல் பாதிப்பு எதிரொலி- 11ம், 12ம் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

மிச்சாங் புயல் பாதிப்பு எதிரொலி- 11ம், 12ம் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.

சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. புயல் உருவாவதற்கு முன்பே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வியாழக்கிழமை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.