கல்வியாண்டின் இடையில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை கைவிட பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 16, 2023

கல்வியாண்டின் இடையில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை கைவிட பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

The Tamil Nadu Graduate Teachers' Association demands that the recruitment of graduate teachers in the school education department be abandoned between the academic years. - கல்வியாண்டின் இடையில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை கைவிட வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

எதிர் வரும் 20:112023 (திங்கள்) அன்று அரசு உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பார்வை 1 இல் காணும் செயல் முறைகள் படி, பணி நிரவல் கலந்தாய்ரை (Surplus Transfer Counseling) மாவட்ட அளவில் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள். இது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் இரண்டு ஆண்டுகளாக வழங்கப் படவில்லை. எனவே இந்த இரண்டு பதவி உயர்வுகளையும் வழங்கினாலே பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் கல்வி ஆண்டின் இடையில் வேண்டுதலான அரையாண்டுத்தேர்வு நடைபெறவுள்ள காலத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடத்தினால் அரசுப் பொதுத் தேர்வு எழுதவுளள பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நலன் கருதி 20.112023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வினை, தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறும் மேலும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் உயர்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஆகிய இரண்டு பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திய பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வினை நடத்திடுமாறு தங்களை பெரிதும் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.