அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - Student hangs himself in government school classroom - Kalviseithi Official

Latest

Monday, November 20, 2023

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - Student hangs himself in government school classroomஅரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை Student hangs himself in government school classroom

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவன் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபக் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து விசாரணை நடத்தியதில் மாணவன் வீட்டிலிருந்து பள்ளிக்கு காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளார். இதுகுறித்து தீபக்குடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரிக்கும் பொழுது மாணவன் தீபக் கடந்த 10 நாட்கள் முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவரை கண்டுப்பிடித்து திருப்பி வீட்டில் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவன் மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால், ராமநாதபுரம் காலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் தீபக் இன்று காலை வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது உடல் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.