secondary teachers fighting - "சமவேலைக்கு சமஊதியம்" வேண்டி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 3, 2023

secondary teachers fighting - "சமவேலைக்கு சமஊதியம்" வேண்டி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்.



The problem of secondary teachers fighting for "equal pay for collaboration" should be addressed. -Tamil Nadu Primary School Teachers Association Request. - "சமவேலைக்கு சமஊதியம்" வேண்டி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில், 2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களை போல சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டுமென கடந்த 6 நாட்களாக கடும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே பணி ஒரே பதவி - ஒரே கல்வி தகுதி என அனைத்தும் சமமாக உள்ள நிலையில், உடன் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. • சமவேலைக்கு சமஊதியம்-அது ஒன்றிய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் - அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.