அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் கொண்ட அந்த குழு 3 மாதத்தில் அறிக்கையை அளிக்கும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும். ரூ.10 லட்சத்தில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர். போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்

அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு

போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு

நமது சம வேலைக்கு சம ஊதியம் கோரி நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்..

#SSTA மாநில தலைமை#

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவிப்பில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் , பகுதிநேர ஆசிரியர் சங்கம் & டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

*பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்!*

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்பதால் போராட்டம் தொடரும் என பகுதி நேர ஆசிரியர்கள் குழு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகிய மூன்று சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இது தொடர்பாக இன்று (அக்.4) முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் குழு 3 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் எனக் குறிப்பிட்டார். 

இதனிடையே அரசின் இந்த நடவடிக்கையில் திருப்தி இல்லாததால், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.