முன்னாள் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்வு - சட்டசபையில் முதல்-அமைச்சர் மசோதா தாக்கல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 11, 2023

முன்னாள் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்வு - சட்டசபையில் முதல்-அமைச்சர் மசோதா தாக்கல்

முன்னாள் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்வு சட்டசபையில் முதல்-அமைச்சர் மசோதா தாக்கல்



சென்னை:முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதியத்தை, 25,000த்தில் இருந்து, 30,000 ரூபாயாக உயர்த்த, சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, இந்தாண்டு ஏப்ரல், 19ல், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். ஓய்வூதியம் உயர்த்தப்படுவதால், ஆண்டுக்கு, 6.54 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும். இந்த சட்ட மசோதா உட்பட, நேற்று ஏழு சட்ட மசோதாக்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில், 1982ம் ஆண்டு சீட்டு நிதி சட்டத்தை தமிழகத்திற்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு; 2017ம் ஆண்டு தமிழ்நாடுஜி.எஸ்.டி., சட்டத்தை, மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு; வணிகர்களுக்காக முதல்வர் அறிவித்த சமாதான திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சட்ட முன்வடிவு போன்றவை, சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன மற்றவை இன்று ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளன.

சீட்டு நிதி சட்டத்தின் கீழ், பதிவாளர் அல்லது அவரது நியமனதாரரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர், மாநில அரசிடம் மேல் முறையீடு செய்யலாம்.

சட்ட மசோதா நிறைவேற்றம்



இவ்வாறு அதிக எண்ணிக்கையில், மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றை விரைவாக விசாரிப்பதற்காக, சட்ட திருத்தம் செய்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேல் முறையீடு மனுக்களை, விசாரிக்கும் அதிகாரத்தை கீழமை அலுவலர்களுக்கு ஒப்படைக்க, மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க, இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.