அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 13, 2023

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள்



12 demands promised to be fulfilled in the meeting of the teachers union executives with Minister Anbil Mahesh Poiyamozhi. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள் என்ன ?

நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள் என்ன ? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் , அவர் நிறைவேற்றுவதாக உறுதியளித்த கோரிக்கைகளின் விவரங்களை ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ளன . அதன் விவரம் வருமாறு :

* இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை மூவர் குழுவிற்கு பரிந்துரை செய்து தீர்வு காணுதல் ,

* எமிஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து , ஆசிரியர்கள் , மாணவர்கள் வருகைப்பதிவு தவிர , பிற அனைத்து வகையான பதிவேற்றப் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் செய்யப்படும் .

* 2019 - ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை முதல் தகவல் அறிக்கை 586 பேருக்கு நிலுவையில் உள்ளது . இதனால் வெளிநாடு அனுமதி , விருப்பப் பணித்துறப்பு கோருபவர்கள் பாதிக்கப்படுகின்ற னர் . அவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

* தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ரூ .5,400 தர ஊதியம் பெற்றவர்களின் தணிக்கைத்தடை முற்றிலும் நீக்கப்படும் . அவர்களே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் . நேர்வில் அதன் தரஊதியம் தொடர ஆணை பெறப்படும் .

* பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் , பதவி உயர்வு பணிமூப்பின் அடிப்படையிலேயே வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும் . விரைந்து தீர்வுகாண தனிக்கவனம் செலுத்தப்படும் . நடந்த பேச்சுவார்த்தை என்பது ஆசிரியர்களுக்கு தொடர்பாகவும் , அமைச்சர் மகிழ்ச்சியான நிறைவேற்றுவதாக அறிவித்த அடுத்த மாதம் ( நவம்பர் ) .யில் இருந்து அகை விடுவிக்கப்படுவார்கள் .

* எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் கிடையாது .

* பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் ( எஸ்.எம்.சி. ) ஆண்டிற்கு 4 முறை கூட்டினால் போதும் . * உயர்கல்வி படித்த 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கப்படும் .

* உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு பருவகால ஊதிய உயர்வின்றி ' என்ப்ரீ பே ' மட்டுமே பெற்றுவரும் ஆசிரியர்கள் 1,500 பேருக்கு நியமனம் முதல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல் ,

* பி.லிட் . முடித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் , அதன் பின்னர் பி.எட் . படித்தால் வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக் | கைத் தடைகள் நீக்க நடவடிக்கை .

* 58 மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பள்ளித் துணை ஆய்வர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு , நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு பணி மாற்றம் அளிக்கப்படும் .

* பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும் . 3 மாத காலத்திற்குள் மாற்று ஏற்பாடு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.