நீட் தேர்வில் பூஜ்ஜிய (ஜீரோ) மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 20, 2023

நீட் தேர்வில் பூஜ்ஜிய (ஜீரோ) மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம்

நீட் தேர்வில் பூச்சியம் (ஜீரோ) மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் - மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு

Urgent Attention all Candidates participating in NEET-PG Counselling 2023:

It is for the information to candidates that vide Letter No. U-12021/07/2023-MEC (Pt-I) dated 20.09.2023 (Copy attached below), the qualifying percentile for PG Courses (Medical/ Dental) for NEET PG Counselling 2023 has been reduced to 'ZERO' across all categories by MoHFW. In this regard, it is mentioned that Fresh Registration & Choice Filling for Round-3 of PG Counselling will be opened again for candidates who have become eligible after reduction of percentile. Candidates who have become freshly eligible can register and participate in Round-3 of counselling. The candidates who are already registered need not register again. However, they will be allowed to edit their choices. A fresh schedule for Round-3 onwards for PG Counselling will be put up on MCC website soon. Candidates are advised to be in touch with MCC website for further updates. AL

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பேண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் (மருத்துவம்/ பல் மருத்துவம்) என்பது விண்ணப்பதாரர்களின் கலந்தாய்வில் அனைத்து வகைகளிலும் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும். முதுநிலை கலந்தாய்விற்கான சுற்று-3 முதல் புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் புதுப்பிப்புகளுக்கு மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் போன்ற படிப்புகளில் சேர, NEET PG தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்றாலும், அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3 வது சுற்று கலந்தாய்வில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான 3 வது சுற்று கலந்தாய்வுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.