ஆசிரியர்களை தண்டிக்க கூடாது - தினமலர் தலையங்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 29, 2023

ஆசிரியர்களை தண்டிக்க கூடாது - தினமலர் தலையங்கம்

ஆசிரியர்களை தண்டிக்க கூடாது - தினமலர் தலையங்கம்

கண்டிப்பு காட்டி வளர்க்காத குழந்தை நல்ல நெறியோடு வளராது. குழந்தையை கண்டிப்பதில் பெற்றோரின் பாசம் குறுக்கிட்டால், அந்த குழந்தையை நெறிப்படுத்த இருக்கும் ஒரே வாய்ப்பு ஆசிரியர்கள் தான்.

அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கும்போது அவர்களே நடவடிக்கைக்கு உள்ளானால், ஆசிரியர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள்.

"வந்தோமா பாடம் நடத்தினோமா, கிளம்பி போனோமா' என்ற இடத்துக்கு ஏற்கனவே பல ஆசிரியர்கள் வந்துவிட்ட நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் ஆசிரியர்களின் கைகளை இன்னும் கட்டிப்போடவே செய்யும்.

தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு ஆசிரியர்கள் வந்துவிட்டால், அது எதிர்கால சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும்.

அது மாணவர்களுக்கும், சமூகத்துக்கும் தான் பாதிப்பே தவிர, ஆசிரியர்களுக்கு அல்ல. இதுபோன்ற நேரங்களில் ஆசிரியர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் பள்ளிக்கல்வித்துறைக்கு இருக்கிறது.

ஏதாவது ஒரு பள்ளியில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும்போது, அப்போதைக்கு நிலைமையை சமாளிக்க ஆசிரியர்களை தண்டிப்பதை பள்ளிக்கல்வித்துறை நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.