தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ₨10 ஆயிரம் அபராதம் விதிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 23, 2023

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ₨10 ஆயிரம் அபராதம் விதிப்பு



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ₨10 ஆயிரம் அபராதம் விதிப்பு

ஆசிரியர் பணி ஒப்புதல் வழங்கக்கோரிய வழக்கில் 3 ஆண்டு தாமதமாக பதில் மனு தாக்கல் செய்த தொடக்க கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது

திருநெல்வேலியை சேர்ந்த ரோகிணி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ‛‛ தான் தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்க கோரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது'' எனக்கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2019ம் ஆண்டில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. 3 ஆண்டு காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது.


இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.,13க்கு ஒத்திவைத்தது. CLICK HERE TO READ 10 ஆயிரம் அபராதம் FULL NEWS

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.