CEO / DEO க்களுக்கான செப்டம்பர் மாத ஆய்வுக் கூட்டம் - DSE செயல்முறைகள்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 21.09.2023, 22.9.2023 மற்றும் 23.09.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 21.09.2023 , 22.09.2023 மற்றும் 23.09.2023 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . கூட்டம் நடைபெறும் இடம் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் . மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினி மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கலாகிறது . திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.