பிளஸ் 1 வகுப்பு முதல் நீட் பயிற்சி: ராமதாஸ் வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 4, 2023

பிளஸ் 1 வகுப்பு முதல் நீட் பயிற்சி: ராமதாஸ் வலியுறுத்தல்

பிளஸ் 1 வகுப்பு முதல் நீட் பயிற்சி: ராமதாஸ் வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு பிளஸ் 1 வகுப்பு முதல் நீட் பயிற்சி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக் கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண் டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்குவதுதான் சரியான செயலாக இருக்கும்.

சமூக நீதிக்கு எதிரான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்ய வேண் டும்; பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்து வப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ப துதான் பாமகவின் நிலைப்பாடு. எனினும், நீட்தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள், குறிப் பாக தனியார் நிறுவனங்களில் நீட் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத அரசு பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெறு வதை உறுதி செய்வதுதான் அரசின் கடமை ஆகும்.

எனவே, பிளஸ் 1 வகுப்பு தொடங்கிய வாரம் முதல், பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரி யர்கள், வல்லுநர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.