த.வெ.க - ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள் TVK – Key Promises Made to Teachers and Government Employees
ஆசிரியர் நலன்
1. சம வேலை! சம ஊதியம்!
தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்திருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள்.
அதுபோல், தற்காலிக ஆசியர்களாகப் அவர்கள் பணியாற்றும் காலத்தில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக தற்காலிக ஆசிரியர்களும் "சம வேலைக்கு சம ஊதியம்” பெறுவது உறுதி செய்யப்படும்.
2. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெற அழைத்துச் செல்லப்படுவார்கள்.
3. ஆசிரியர் நியமனம்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும். 4. ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை திறன்படக் கற்றுக் கொள்ள ஏதுவாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
5. கற்பித்தல் அல்லாத பணிகள் நீக்கம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களை கற்றல்-கற்பித்தல் அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்.
அங்கன்வாடிப் பணியாளர்-ஆஷா பணியாளர் நலன்
1. ஊதிய உயர்வு
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் 'கிரேடு - டி' அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அதுபோல், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆஷா பணியாளர்களுக்கும் மாத ஊதியம் 10,000 ரூபாய் என்பது உறுதி செய்யப்படும்.
2 ஓய்வூதியப் பலன்
20 வருடங்கள் பணி நிறைவு செய்துள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் 15 லட்சம் ரூபாய் ஓய்வூதியப் பலனாகப் பெறுவது உறுதி செய்யப்படும். அரசு ஊழியர் நலன்
1. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல்
தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
2. அரசு ஊழியர் நல வாரியம்
அரசு, போலீஸ் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் ரூ.5,000 கோடி ஒதுக்கீட்டுடன் அரசு ஊழியர் நல வாரியம் அமைக்கப்படும்.
3. தற்காலிகப் பணியாளர் பணி நிரந்தரம்
ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
4. பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலில் வெளிப்படைத்தன்மை
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்கள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவது உறுதி செய்யப்படும்.
5. 8ஆம் ஊதியக் குழுவின் உடனடி அமலாக்கம்
ஒன்றிய அரசு அறிவித்தவுடன், அரசு ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 8ஆம் ஊதியக் குழுவை மாநிலத்தில் உடனடியாக த.வெ.க. அரசு அமல்படுத்தும்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை
CLICK HERE TO DOWNLOAD TVK மக்களின் தேர்தல் அறிக்கை 2026 TVK 2026 Election Guarantees PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.